இன்பத்துப்பால் - களவியல்
―
புணர்ச்சி மகிழ்தல்
17
என்று நச்சினார்க்கினியர் கூறியிருப்பதனாலும், காந்தருவ வொழுக்கம் நெறிப் படாததும் காமவின்ப மொன்றையே கருதியதும் மக்க ளைந்திணைக் கள வொழுக்கத்தினின்றும் வேறுபட்டது மாகுமென்று துணியப்படும். வெம்பாவி யிலும் (mist) மஞ்சிலும் தோன்றும் நகர நிழலை (mirage) கந்தருப்ப நகரம் என்பதனாலும், காந்தருவ வொழுக்கத்தின் கருதியற்றன்மை அறியப்படும்.
1101.
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள்.
(இயற்கைப் புணர்ச்சி யிறுதிக்கண் தலைமகன் சொல்லியது.)
(இ-ரை.) கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் கண்ணாற் கண்டும் காதாற் கேட்டும் நாவாற் சுவைத்தும் மூக்கால் முகர்ந்தும் உடம்பால் தீண்டியும் நுகரப்படும் ஐம்புலவின்பங்களும், ஒண்டொடி கண்ணே உள வொளிபொருந்திய வளையலை யணிந்தாளிடத்தேயே
இவ் கமைந்திருக்கின்றன.
யுட்கொண்டு
கூறியதாகும்.
ஒருங்
கேட்ட
வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பொருளால் நுகரப்படும் ஐம்புல வின்பமும், ஒரே காலத்து இவளிடம் நுகரப்பட்டன என்று பாராட்டிக் கூறியவாறு. இது சின்றின்பத்திற் பெண்ணின்ப மொழிந்த பிறவின்பங்களு முண்டே யென்று சொல்வாரை லின்பம் இன்குரற் பேச்சால் மட்டுமன்றிப் பாட்டாலும் நிகழ்வதாம். உம்மை முற்றும்மை. 'ஒண் டொடி' அன்மொழித் தொகை. ஏகாரம் பிரிநிலை. “வடநூலார் இடர்க்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில் களும் ஈண்டடக்கிக் கூறப் பட்டன" என்று பரிமேலழகர் ஆரிய அநாகரிகத்தை ஒப்புக்கொண்டிருப்பது பாராட்டத்தக்கதே.
1102. பிணிக்கு மருந்து பிறம னணியிழை தன்னோ-க்குத் தானே மருந்து.
(தலைமகன் இடந்தலைப்பாட்டின்கட் சொல்லியது.)
(இ-ரை.) பிணிக்கு மருந்து மன் பிற - ஊதை (வாதம்) முதலிய நோ- கட்கு மருந்தாவன, பெரும்பாலும் அவற்றிற்கு மாறான இயல்புள்ள பிற பொருள்களாம்; அணியிழை தன் நோ-க்கு மருந்து தானே - ஆனால் இவ் வழகிய கலன்களை யணிந்தவளோ, தன்னாலுண்டான நோ-க்கு மருந்து தானே யாயினாள். இஃதொரு வியப்பே!