உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - களவியல் - காதற் சிறப்புரைத்தல்

29

வாழ்தலின் இனியதும் சாதலின் இன்னாததும் இல்லையாதலின், கூடு தல் வாழ்தலும் நீங்குதல் சாதலும் போல்வன என்றான். கூடுமிடத்து என்பதும் எனக்கு என்பதும் அவா-நிலையான் வந்தன. 'ஆயிழை' அன்மொழித் தொகை.

1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே னொள்ளமர்க் கண்ணாள் குணம்.

(ஒருவழித் தணந்துவந்த தலைமகன், நீயிர் தணந்த ஞான்று

எம்மை நினைத்தீரோ என்ற தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) ஒள் அமர்க் கண்ணாள் குணம் யான் மறப்பின் உள்ளுவன் ஒளிபொருந்தியவா- அமர் செ-யுங் கண்ணையுடையாளின் குணங்களை யான் என்றேனும் மறந்தேனாயின் நினைத்திருப்பேன்; மறப்பு அறியேன் - ஆயின், யான் ஒருபோதும் மறந்ததில்லை ஆதலால் நினைத்ததுமில்லை.

குணங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, அன்பு, கற்பு என்பன. 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. இதுவரையுந் தலைமகன் கூற்று; இனி வருவன தலைமகள் கூற்று. ஒருவழித் தணத்தலாவது, இரவுக்குறிக் காலத்திறுதியில் அலரெழுந்தபின் அது அடங்கும்வரை தலைமகன் சில நாள் தன் ஊரின்கண் தங்கியிருத்தல்.

1126.

கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார் நுண்ணியரெங் காத லவர்.

(ஒருவழித் தணப்பின்கண் தலைமகளைத் தோழி இயற்பழிப்பா ளென்றஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.)

(இ-ரை.) எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் ஒரு போதும் கண்ணகத்து நின்றும் நீங்கார்; இமைப்பின் பருவரார் யாம் அதை மறந்து ஒருகால் இமைத்தோமாயினும் அதனால் வருத்தமுறார். நுண்ணியர் அத்துணைக் கட்புலனாகாத நுண்மையுடையவர் அவர்.

தாம் காணாமைபற்றிச் சே-மைக்கண் சென்றாரெனக் கருதுவார் கருதுக; ஆயின், யான் இடைவிடாது காணுதலின் அங்ஙனங் கருதேன் என்றவாறு. இடையறாத நினைவு முதிர்ச்சியால் என்றுங் கண்முன் நிற்றல் போல் தோன்றலாற் 'கண்ணுள்ளிற் போகார்' என்றும், இமைத்த போதும் அது நீங்காமையால் 'இமைப்பிற் பருவரார்' என்றும் கூறினாள்.