உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

திருக்குறள்

தமிழ் மரபுரை





32

திருக்குறள்

ம்

தமிழ் மரபுரை

ஏமமாதல் அத் துன்பம் நீங்குமாறு அந் நுகர்ச்சியை மீளத்தருதல். பண்டை நாளிலும் என்போன்ற ஆடவர் இம் முறையே கையாண்டு வந் திருக்கவும், நான் உன்னை நம்பி அதைப் புறக்கணித்தேன். இன்று நீ எனக்குத் துணையில்லாமையை அறிந்தேனாதலின், அவ் வழியையே கடைப்பிடித்து இன்பம் நுகரக் கருதுகின்றேன் என்றவாறு. 'வலி' ஆகு பொருளது.

மடலேறும் வகை வருமாறு:

தன் காதலியைப் பெறாத காதலன் ஆடை களைந்து நீர்ச்சீலை யணிந்து, உடம்பெல்லாம் சாம்பரைப் பூசி, எருக்கமாலை யணிந்து, தன் காதலியின் உருவம் எழுதிய படத்தைக் கையி லேந்திக்கொண்டு, அதையே நோக்கி, அவளிருக்கும் ஊர் நடுவே எல்லாருங் காணத் தவநிலையிலிருப்பன். அவ்வூர்த் தலைவர் அவனைக் கண்டு காதலா-விற்கு அவன் உடம்பட்ட பின், அவனைப் பனங்கருக்கு மட்டையாற் செ-த குதிரைமேலேற்றிப் பெருந்தெருவூடிழுத்துச் செல்வர். கருக்குப் பட்டவிடமெல்லாம் அரத்தந் தோன்றாது விந்துநீர் தோன்றின், அவன் காதலியை அவனொடு கூட்டிவைப்பர்; இன்றேல் வையார். இது அநாகரிகமும் பேதைமையும் மிக்க முந்துகால வழக்காதலின், தமிழிலக்கியத்திற் அதை நினைவுறுத்தலேயன்றி

வேறன்றென்க.

1132.

குறித்திருப்பதெல்லாம்

நோனா வுடம்பு முயிரு மடலேறு நாணினை நீக்கி நிறுத்து.

(நாணுடைய நுமக்கு அது முடியாதென மடல் விலக்கிய

தோழிக்குத் தலைமகன் சொல்லியது.)

(இ-ரை.) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் அத் துன்பத்தைப் பொறாதவுடம்பும் உயிரும் தமக்குக் காப்பான மடற்குதிரையை ஏறக் கருது கின்றன; நாணினை நீக்கி நிறுத்து அதற்குத் தடையான நாணத்தை நீக்கி வைப்பது.

அறிவு நிறையோர்ப்புக் கடைப்பிடி யென்னும் ஆண்மைக்குணம் நான் கும் முன்னரே நீங்கிவிட்டன. எஞ்சியிருக்கும் நாணம் என்னும் இருபாற் பொதுக் குணமும், மடலேற்றத்தின் பொருட்டு நீக்கப்பட்டுவிடும். அல்லாக் கால் உயிரும் உடம்பும் துன்பம் பொறுத்துக்கொண்டு உடனிற்கு மாறில்லை யென்பான். 'நோனா வுடம்பு முயிரும் மடலேறும்' என்றான். 'உழந்து’