உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - களவியல் - அலரறிவுறுத்தல்

39

(இ-ரை.) கண்டது ஒரு நாள் யான் என் காதலரைக் கண்ணுறப் பெற் றது ஒரு வேளையே; அலர் திங்களைப் பாம்பு கொண்ட அற்று - ஆனால் உண்டான அலரோ, நிலாவைக் கரும்பாம்பு கௌவின செ-தி போல, உலக மெங்கும் பரவியுள்ளது.

காட்சிக்கும் இடமில்லாதபோது இங்ஙனம் வீணாக அலர் பரவும் இக் களவொழுக்கத்தை உடனே விட்டுவிட்டு, வரைந்து கொள்ளுதல் வேண்டும் என்பதாம். 'பாம்புகொண்டற்று' எனக் கருமியத்தைக் கரணியமாகச் சார்த்திக் கூறினாள். கதிரவன் மறைவைக் கேது என்னும் செம்பாம்பு கௌவலாகவும், திங்கள் மறைவை இராகு என்னும் கரும்பாம்பு கௌவலாகவும், கருதியது பண்டைக் குருட்டு நம்பிக்கை. சே - சேது - கேது. இர் - இரா - இராவு - இராகு. மன்னும் உம்மும் - - ஈரிடத்தும் அசைநிலை யென்பர். இடையீடுகள் நிலா வெளிப்படுதலும் நா- குரைத்தலும் ஊரார் விழாக்கொண்டாடுதலும் போல் வனவற்றால் நிகழ்வன. சிறைப்புறம் வேலிக்கு வெளிப்பக்கம்.

1147. ஊரவர் கௌவை யெருவாக வன்னைசொன் னீராக நீளுமிந் நோ-.

(தலைமகன் சிறைப்புறத்தானாத லறிந்த தோழி, வரைவு காலந்தாழ்த்தலை ஆற்றாளான தலைமகளிடம் ஊரார் அலரும் அன்னை சொல்லும் நோக்கி

ஆற்றல் வேண்டுமென்று சொன்னவிடத்து, அவள் சொல்லியது.)

(இ-ரை.) இந் நோ- - இக் காம நோயாகிய பயிர்; ஊரவர் கௌவை எரு வாக அன்னை சொல் நீராக நீளும்... இவ் வூர்மகளிர் எடுக்கின்ற அலரை எரு வாகவும், அது கேட்டு அன்னை கடிந்து கூறும் வெஞ்சொல்லை நீராகவும் கொண்டு வளர்கின்றது.

நோயைத் தணிக்க வேண்டிய ஏதுக்கள் அதை வளர்த்தே வருகின்றன என்பதாம். தலைமகன் விரைந்து வரைவானாதல் கருதிய பயன். 'ஊரவர்' இங்கு ஆணொழி பொதுச் சொல். நோயைப் பயிரென்று உருவகியாமையால் இது ஒருமருங் குருவகம்.

1148. நெ-யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கெளவையாற் காம நுதுப்பே மெனல்.

(இதுவுமது.)

(இ-ரை.) கெளவையால் காமம் நுதுப்பேம் எனல் – அயலாரும் பகை வரும் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்துவிடுமோமென்று கருதுதல்;