உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் கற்பியல் - பிரிவாற்றாமை

முடியுமாதலின்

ஒருவகையினும்

45

பெருந்திணையாகாமை யானும், தமிழ

மணமுறையை ஆரிய மணமுறையொடு ஒப்பு நோக்குவது ஒருசிறிதும் பொருந்தாதெனக் கூறி விடுக்க.

இக் கற்பியலை ஆசிரியர் பதினெண் ணதிகாரத்தாற் கூறத்தொடங்கி, முதற்கண் பிரிவாற்றாமை கூறுகின்றார்.

அதி. 116 - பிரிவாற்றாமை

அதாவது, காதலன் காதலியை வரைந்துகொண்ட பின், தலைமகள் இல்லத்திலிருக்கத் தலைமகன் அறம்பொருள்பற்றித் தன் தொழிற்கேற்ப ஒரு வினைமேற்கொண்டு ஆயிடையுஞ் சேயிடையும் பிரிந்து செல்லுங்கால், அவள் அப் பிரிவைப் பொறாதிருத்தல். அது பிரிவுணர்த்திய தலைமகனுக்குத் தோழி கூறல், அவளுக்குத் தலைமகள் தானே அவன் குறிப்பறிந்து கூறல், பிரிவுணர்த்திய விடத்துக் கூறல். பின் ஆற்றுவிக்குந் தோழிக்குத் தலைமகள் மறத்துக்கூறல் என நால்வகையாற் கூறப்படும்.

இஃது அறநூலாதலால், இலக்கண நூல்களிலுங் கோவைகளிலுங் கூறப் படும் பரத்தையிற் பிரிவு இங்கு விலக்கப்பட்டதாம். இதையறியாது "அறம் பொரு ளின்பங்களின் பொருட்டு” என இன்பத்தையுஞ் சேர்த்துக் கூறினார் பரிமேலழகர். கற்பொடு பொருந்தாத பிறனில் விழைதல் அறத்துப் பாலிலும், வரைவின் மகளிர் தொடர்பு பொருட்பாலிலும், கூறி விலக்கப் பட்டமை காண்க. புலவிமுதலிய மூன்றதிகாரங்களிலுங் கூறப்பட்டுள்ள பரத்தைமைக் குறிப்புக ளெல்லாம், தலைமகள் தன் மடமையால் தலைமகன்மீது ஏற்றிக்கூறிய இட் டேற்றமேயன்றி வேறல்லவென்க.

பிரிவு தூது, போர், சந்துசெ-தல், நாடுகாவல், பொருளீட்டல் என நோக்கம்பற்றிப் பலதிறப்படும். ஆரிய வேதமும் அதன் வழிப்பட்ட நூல் களுங் கற்கச்செல்லும் ஓதற்பிரிவு தமிழருக்குரியதன்று. 'வேந்தற் குற்றுழி' என் னும் வேளாண் தலைவர் வேளிர் பிரிவும், 'வேந்துவிடு தொழில்' என்னும் வேளாளர் பிரிவும், போருள் அடங்கும்.

1151.

u

செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.

(பிரிந்து கடிதில் வருவேனென்ற தலைமகனுக்குத் தோழி சொல்லியது.)

(இ-ரை.) செல்லாமை உண்டேல் எனக்கு உரை தலைவ! நீ எம்மை விட்டுப் பிரியாமை யுண்டாயின் எனக்கு அதைமட்டும் சொல்; மற்றுநின் வல்