உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - கற்பியல் - படர்மெலிந்திரங்கல்

51

இனி அதற்குத் தக்கது நீ செ-தல் வேண்டும் என்பதாம். ‘இஃதோ’, என் பது சுட்டுப்பெயர் ஈறு திரிந்தது அன்று. மறைத்து என்ன பயன் என்பதுபட நின் றமையின் 'மன்' ஒழியிசை. 'இஃதோர் நோயை' என்னும் பாடம் சரியானதன்று. 1162. கரத்தலு மாற்றேனிந் நோயைநோ- செ-தார்க் குரைத்தலு நாணுத் தரும்.

(ஈண்டையா ரறியாமல் மறைத்தல், ஆண்டையார்க்குத் தூதுவிடல் என்னும் இரண்டனுள் ஒன்று செ-யவேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) இந் நோயைக் கரத்தலும் ஆற்றேன் - இக் காமநோயை அக்கம் பக்கத்தார் அறியாவாறு மறைக்கவும் என்னால் முடியவில்லை; நோ- செ- தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் - இனி, இந் நோயை நீக்குமாறு இதைத் தந்த காதலர்க்கு அறிவிக்கவும் வெட்கமாயிருக்கின்றது. என் செ-வேன்?

நோ- மேன்மேலும் மிகுதலாற் 'கரத்தலு மாற்றேன்' என்றும், பிரிந்து போனது அண்மைக் காலமே யாதலானும் இன்பவாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளீட்டுதலைத் தடைசெ-வது அறிவுடைமை யாகாமையானும் 'நாணுத் தரும்' என்றும் கூறினாள்.

1163.

காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென் னோனா வுடம்பி னகத்து.

(இ-ரை.) காமமும் நாணும்

(இதுவுமது.)

-

என் காமநோயும் அதை யுண்டாக்கிய வர்க்கு உரைப்பதைத் தடுக்கும் நாணமும்; நோனா என் உடம்பின் அகத்து அவற்றைத் தாங்காது வருந்தும் என் உடம்பினிடத்து; உயிர் காவாத் தூங்கும் என் உயிரைக் காவாட்டுத் தண்டாகக் கொண்டு அதன் இரு கடையிலுந் தொங்குகின்றன.

காமமும் நாணமும் ஒத்த இருதலைச் சுமைகளாக வருத்துவது தோன்றக் 'காவாத் தூங்கும்' என்றும், உயிரிருப்பதனாலேயே காமமும் நாணமுந் தோன் றுவதால் 'உயிர் காவா' என்றும், காவாட்டுச் சுமையைத் தாங்கும் வலிமை நோயால் மெலிந்துள்ள உடம்பிற் கின்மையால் 'நோனா வுடம்பி னகத்து' என் றும் கூறினாள். நோயும் நீங்காது