உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - கற்பியல் - படர்மெலிந்திரங்கல்

53

(இ-ரை.) காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ் செ-யும் போது, அவ் வின்பம் கடல்போற் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனின் பெரிது - பின்பு அதுதானே பிரிவால் துன்பஞ் செ-யும்போது, அத் துன்பம் அக் கடலினும் பெரிதாம்.

காமத்தால் வரும் இன்பமுந் துன்பமும் அளவொத்திருப்பின் ஆற்ற லாம். துன்பம் இன்பத்தினும் மிகுந்திருப்பதால் ஆற்றுமாறில்லை யென்பதாம். 'மற்று' வினைமாற்று அல்லது பின்மைப் பொருளில் வந்தது. 'அடுங்கால்' என்று பின்றொடரில் வந்தமையால், அதன் மறுதலை யெச்சம் முன்றொடர்க்கு வரு விக்கப்பட்டது.

1167.

காமக் கடும்புன னீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே யுளேன்.

(காமக்கடலை நிறைபுணையாக நீந்தல் கூடுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - காமம் என்னுங் கடலை நிறைபுணையாக நான் நீந்தாமலில்லை, நீந்தத்தான் செ-தேன், நீந்தி யுங் கரை காணவில்லை; யாமத்தும் யானே உளேன் - அதனால் மற்றெல்லாருந் தூங்கும் நள்ளிரவிலும் நடுக்கடுலில் தானே தன்னந்தனியாக விருந்து அலை சடிப்படுகின்றேன்.

நிறைபுணை காமப் பெருங்கடலைக் கடத்தற்குப் போதிய வலிமை யுள்ளதா யில்லையென்பது கருத்து. 'யானே யுளேன்' என்பது நீ துணையா யில்லை யென்னுங் குறிப்பினது. கடுமை இங்கு மிகுதி குறித்து நின்றது. எச்ச வும்மை முன்னுங் கூட்டப்பட்டது. புணை குறிக்கப்படாமையால் இஃ மருங் குருவகம்.

1168.

மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா வென்னல்ல தில்லை துணை.

(இரவின் கொடுமை கூறி வருந்தியது.)

(இ-ரை.) இரா அளித்து - இவ் விரவு இரங்கத்தக்கதாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என் அல்லது துணை இல்லை - இவ் வுலகத்து மற்றெல்லா வுயிர்களையுந் தூங்கவைத்துவிட்டதனால், இராமுழுதுந் தூங்காத என்னைத் தவிர வேறொரு துணையும் இல்லாதிருந்தது.