இன்பத்துப்பால் - கற்பியல் - படர்மெலிந்திரங்கல்
55
வெள்ள நீர் நீந்தல - என் புறக்கண்கள் இங்ஙனம் வெள்ளம்போலக் கண்ணீர் வடித்து அதில் நீந்தா.
அகக்கண்ணிற்குச் செலவு உள்ளுதலே யாதலின் 'உள்ளம்' என்றும், புறக்கண்கள் அங்ஙனஞ் செல்ல வியலாமையின் 'செல்கிற்பின்' என்றும் கூறி னாள். 'மன்னோ' பிற்காலத்து ஈரசைநிலைகளும் (மன், ஓ) முற்காலத்து ஆடூஉ முன்னிலையும் (அரசே!) ஆகும். “அது (செல்வது) மாட்டாமையின், இனி னி அவற்றிற்கு நீந்துதலேயுள்ள தென்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக் கண் வந்தது” என்பர் பரிமேலழகர். ‘கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இக் குறளால் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவா-செ-யப்பட்டது.
அதி. 118 - கண்விதுப்பழிதல்
அதாவது, தலைமகளின் கண்கள் தலைமகனை விரைந்து காணும் விருப்பத்தால் வருந்துதல், விதுப்புக் காண்டற்கு விரைதல். இது இடைவிடாது நினைத்து மெலிந்தவிடத்து நிகழ்வதாகலின், படர்மெலிந் திரங்கலின் பின் வைக்கப்பட்டது.
1171.
கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோ- தாங்காட்ட யாங்கண் டது.
(நின் கண்கள் கலங்கித் தம் அழகிழக்கின்றன. ஆதலால்
நீ அழுதல் கூடாதென்ற தோழிக்குச் சொல்லியது.)
(இ-ரை.) தாம் காட்ட தண்டாநோ- யாம் கண்டது - தாம் அன்று எம் காதலரை எமக்கு வலியக் காட்டினதினாலன்றோ இத் தணியா நோயை யாம் அடைந்தது; கண் தாம் கலுழ்வது எவன் கொல் - அங்ஙனமிருக்கவும், இன்று தமக்கு அவரைக் காட்டச் சொல்லி என் கண்கள் என்னை வேண்டி யழுவது என்ன கருத்தொடு? எமக்குத் தெரியவில்லையே!
இன்றும் அன்றுபோல் தாமே காட்டுவதல்லது யாம் காட்டுவது எங்ஙனம் என்பதாம். 'காட்ட' என்பதற்குரிய செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'கொல்' ஐயம். 'ஓ' அசைநிலை.
1172.
தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப் பைத லுழப்ப தெவன்.
(இதுவுமது.)