உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

திருக்குறள்

தமிழ் மரபுரை






1186.

விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

(இதுவுமது.)

(இ-ரை.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் விளக்கின் அவிவு பார்த்து உடனே வரக் காத்திருக்கும் இருளைப்போலவே; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - தலைவரின் தழுவல் நெகிழ்வு பார்த்து உடனே வரக் காத்திருக்கும் இப் பசலை.

காதலர் உடனிருந்து தழுவல் நெகிழினும் உடனே வரும் பசலை அவர் பிரிந்து தொலைவிற்குச் சென்றபின் வராதிருக்குமோ என்றவாறாம். பார்த்தல் பார்த்து வருதல். கொண்கன் கொண்டவன். கொள் கொண்கு கொண்கன். ஏகாரம் பிரிநிலை.

1187. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி லள்ளிக்கொள் வற்றே பசப்பு.

(இதுவுமது.)

(இ-ரை.) புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் - முன்பொருநாள் காத லரைத் தழுவிக் கிடந்த நான் அறியாது ஒருசிறிது தள்ளிப் படுத்தேன்; அவ் வளவில் பசப்பு அள்ளிக் கொள்வு அற்று அங்ஙனம் படுத்த அளவில் அள்

ளிக்கொள்ளும் அளவாகப் பசலை வந்து திரண்டுவிட்டது.

அப் புடைபெயர்ச்சிக்கே அவ்வாறான பசலை, இப் பிரிவின்கண் எவ்வா றாகுமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ என்பதாம். ஏகாரம் தேற்றம்.

1188. பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத்

துறந்தா ரவரென்பா ரில்.

(நீ யிங்ஙனம் பசத்தல் கூடாதென்ற தோழியொடு புலந்து சொல்லியது.)

(இ-ரை.) இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் காதலர் வரும்வரை ஆற்றியிராது பசலை கொண்டாள் என்று என்னைப் பழிப்பதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் கைவிட்டுவிட்டுப் போ- விட்டாரென்று அவரைக் குறைகூறுவார் இவ் வுலகத்து ஒருவருமில்லை.