உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

திருக்குறள்

தமிழ் மரபுரை






விடாமை யுணர்த்தி நின்றது. இனி, வியப்புக் குறிப்பினது என்றுமாம். 'ஓஒ இசைநிறை யளபெடை. 'கொல்' ஐயம் ஏகாரம் தேற்றம்.

1205.

தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொ லெந்நெஞ்சத் தோவா வரல்.

(இதுவுமது.)

(இ-ரை.) தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய உள்ளத் தின்கண் எம்மைச் செல்லவிடாது அதைக் காவல் செ-து கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணார் கொல் தாம் மட்டும் எம்முடைய உள்ளத்தின்கண் இடைவிடாது வருதற்கு நாணாரா?

ஒருவரைத் தம்மிடத்திற்கு ஒருபோதும் வரவிடாது தடுத்துவிட்டுத் தாம் மட்டும் அவரிடத்திற்கு ஓயாது செல்லுதல், நாணுடையார் செயலன்மையின் 'நாணார் கொல்' என்றாள். 'கடி' காவலுணர்த்தும் உரிச்சொல்; இனி, விலக்குப் பொருளது எனினுமாம். 'கொல்' ஐயம்.

1206.

மற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடியா னுற்றநா ளுள்ள வுளேன்.

அவரொடு கூடி நுகர்ந்தகாலை யின்பத்தை நினைந்து இறந்துபடுநிலை யடைகின்றா-. அதை மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) யான் அவரோடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு கூடியகாலை யின்பத்தை இடைவிடாது நினைத்தலாலேயே இன்று இறந்து படாதிருக்கின்றேன்; மற்று யான் என் உளேன் - வேறு எவ்வகையில் நான் உயிர்வாழ முடியும்?

நான் உயிர் வாழ்தற்குக் காதலர் தூது வருதல், நம் தூது அவரிடம் சேர்தல் முதலிய பிற வழிகளும் உளவேனும், யான் அவை பெற்றிலேன் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது என்பர் பரிமேலழகர். 'நாள்' ஆகுபொருள்.

1207. மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே

னுள்ளினு முள்ளஞ் சுடும்.

(இதுவுமது.)