உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

திருக்குறள்

தமிழ் மரபுரை






வரும்வரை

உயிரைக் காக்க வேண்டின் இவ் விரண்டுள் ஒன்றை விட்டுவிடுதல் வேண்டும். இவற்றுள் நாணே சிறந்ததாதலின், காதலர் ஆற்றியிருத்தலே தக்க தென்பதாம். 'ஒன்றோ' ஓகாரம் அசைநிலை. 'யானோ' - ஓகாரம் பிரிநிலை.

1248.

முற்றும்மை தொக்கது.

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வா- பேதையென் நெஞ்சு.

(இதுவுமது.)

(இ-ரை.) என் நெஞ்சு என் உள்ளமே! அவர் பிரிந்து நல்கார் என்று அவர் இவ் வாற்றாமையை அறியாமையின் இரங்கி வந்து இன்பந்தரார் என்று கருதி; பிரிந்தவர் பின் ஏங்கிச் செல்வா- - அதை அறிவித்தற் பொருட்டு நம்மைவிட்டுப் பிரிந்துபோனவர் பின் ஏக்கங்கொண்டு செல்கின்றா-; பேதை - நீ என் பேதையா யிருக்கின்றா-?

ஆற்றாமையைக் கண்ணாரக் கண்டும் இரங்காது பிரிந்துபோனவர் இதைச் சென்றறிவித்தவுடன் திரும்பி வந்து

கருதினமையின், 'பேதை' என்றாள்.

1249. உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ

யாருழைச் சேறியென் நெஞ்சு.

(இதுவுமது.)

இன்பந் தருவாரென்று

(இ-ரை.) என் நெஞ்சு - என் மனமே! காதலவர் உள்ளத்தாராக காதலர் உன்னகத்தாராயிருக்கவும்; நீ உள்ளி யாருழைச் சேறி - நீ அவரைத் தேடி யாரிடத்துச் செல்கின்றா-?

உனக்குள்ளேயே யிருக்கின்றவரை நீ வெளியே தேடிச்செல்லுதல் ஒருவர் தன் இல்லத்திற்குள் ளிருப்பவரைத் தேடி வேறோ ரில்லம் செல்வது போலும் எள்ளி நகையாடத்தக்க செ-தியென்பதாம்.

உள்ள மென்புழி அம்முப் பகுதிப்பொருள் விகுதி” என்றார் பரிமே லழகர். நெஞ்சும் உள்ளமும் ஒன்றேயாதலின், உள் என்றிருக்க வேண்டிய