உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கருப்பும் கறுப்பும்

97

உண்மையைக் கடைப்பிடித்தல் வேண்டும். ஓரை என்னும் சொல்லிற்கும் ஹோரா என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் யாதொரு தொடர்புமில்லை. அங்ஙனமே அதற்கும் அவர் (hour) என்னும் ஆங்கிலச் சொல்லிற்கும். கடகவோரை, கன்னியோரை எனக் கணிய நூல்கள் கூறுவது சரியே. ஓரை என்பது கூட்டத்தைக் குறிக்கும் சொல்; அது சிறப்பாக மகளிர் ஓரையையும் உடுக்களின் ஓரையையும் குறிக்கும். மகளிரைக் குறிக்கும் சொல், அவர் விளையாட்டையும் விளையாடும் இடத்தையும் ஆகுபெயராக உணர்த்தும்.

ஒல்லுதல் = பொருந்துதல், கூடுதல். ஒல்-ஓர்-ஓர்-ஓரை.

ஓரையைக் குறிக்கும் இராசி என்னும் வடசொல், கூட்டம் என்னும் பொருளதே. அது பின்னர் இனத்தை உணர்த்தும் இப் பொருளில் அது race என்னும் ஆங்கிலச் சொற்கு இனமாகும். Constellation என்னும் ஆங்கிலச் சொல்லும் உடுக்கூட்டம் என்னும் பொருள்பற்றியே ஓரையைக் குறிக்கும். Con= together stella = star. ஓரை என்னும் தூய தமிழ்ச்சொல்லை ஆரியச் சொல்லாகக் காட்டற்கு, அதைக் கிரேக்கச் சொல்லோடும் ஆங்கிலச் சொல்லோடும் வலிந்து தொடர்புபடுத்தினர். ஆதலால், இனிக் கடகவோரை, கன்னியோரை என்றே குறிப்பிடுக.

தமிழ்ப்பாகை எழுத்தாளர் மன்றச் சிறப்பு மலர் 1964-65