உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 மொழியாராய்ச்சி (COMPARATIVE PHILOLOGY) உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் Turanian, Semitic, Aryan என முப்பெருங் கவைகளா யடங்கும். இவற்றுள் ஒவ்வொரு கவையும் பற்பல கிளைகளாய்ப் பிரியும். ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு மொழித்தொகுதி யாகும். இவற்றுள், துரேனியக் கவையில் திராவிடக் (Dravidian) கிளைக்குத் தலைமையாகக் கருதப்படுவது அமிழ்தினுமினிய தமிழ்மொழியே. ஒரு மரத்தில், சிறு கிளைகட்கு நேர் இயைபு இன்றேனும் அவற்றைத் தாங்கும் பெருங்கவைகட்கு அடிமரத்துடன் நேர் இயைபிருப்பதுபோல, உலக மொழித்தொகுதிகட்குள் சிறு பிரிவுகட்கு நேர் இயைபின்றேனும் அவற்றிற்கு மூலமான பெரும் பிரிவுகட்கு நேரியைபு திட்டமாயுள்ளதாம். எல்லாக் கிளைகட்கும் மூலமான ஓர் அடிமரமிருப்பதுபோல எல்லா மொழிகட்கும் மூலமான ஒரு தாய்மொழியு மிருத்தல்வேண்டும். உலகத்தி லுள்ள மக்களெல்லாம் ஒருதாய் வழியினராதலின் அவர் வழங்கும் மொழிகளும் ஒருதாய் வயிற்று வழியிலாதல் வேண்டும். உலகத்தின் மக்கள் முதன்முதல் தோன்றினவிடம் கி.மு. 2000 ஆண்டுகட்குமுன் இந்துமகா சமுத்திரத்தில் அமிழ்ந்துபோனதும் தலைச்சங்கமிருந்ததுமான குமரிநாடே. ஆத்திரேலியா, தென்னிந்தியா, தென்னாப்பிரிக்கா என்ற மூன்றும் ஆதியில் நிலத்தா லிசைந்திருந்தன வென்று மேனாட்டுப் பண்டிதர்கள் கண்ட வுண்மையே இதற்குப் போதிய சான்றாம். ஆகவே, மக்கள் முதன்முதற் பேசிய மொழி தமிழேயாதல் வேண்டும். எல்லா மொழிகளும் இயற்கை செயற்கையென இருபாலா யடங்கும். இவற்றுள் தமிழ் ஒன்றுமே இயற்கை. ஏனையவெல்லாம் செயற்கை. ஆதலான், தமிழ் இயன்மொழி (Primitive Language) என்றும், ஏனைய திரிமொழி (Derivative Languages) என்றும் கூறப்படும். எல்லா மொழிகட்கு முள்ள பெரும்பாற் சொற்களைப் பகுதிப் பொருளுடன் இயற்கை வடிவில் வழங்குவது தமிழே யென்று மொழிநூலால் (Philology) விளங்குகின்றது. அவற்றுள் ஆங்கிலம் (English), கிரேக்கு (Greek), இலத்தீன் (Latin) என்ற மும்மொழிகளிலும் சென்று வழங்கும் தென்சொற்கள் ஆயிரக்கணக்கின