உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

தேறு - தேறல் = தெளிவு, தேன், தெளிந்த கள்.

தேறு - தேற்று தேற்று = தெளிவு, தெளிவிக்கை, நீரைத் தெளிவிக்கும் தேற்றாங் கொட்டை.

தேற்றுதல் = தெளிவித்தல்.

தேற்று - தேற்றன்மை = தெளிவு.

தேற்று - தேற்றம் = தெளிவு, உறுதி. தேற்றுதேற்றம்

தேற்று தேற்றரவு = தேற்றுகை.

தேற்று - தேற்றன் = தெளிந்த (உண்மையான) அறிவுள்ளவன். "தேற்றனே தேற்றத் தெளிவே” (திருவாச. 1 :82)

தென் - தேன் = மது, கள், இனிமை.

தேன் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் தெளிவு (தெளிந்தது) என்பதே.

தேன் - தேம் = 1. தேன். 'தேம்படு நல்வரை நாட” (நாலடி. 239) 2. கள் (சூடா.). 3. இனிமை. "தேங்கொள் சுண்ணம்” (சீவக. 12) ஒ.நோ: மேன்பாடு - மேம்பாடு.

தேம் – தீம். 1. - இனிமை (பெயர்). –

"தீங்கதிர்த் தோற்ற மென்னவே" (சீவக. 2419) 2. இனிய (பெயரெச்சம்)

"நெருநலும் தீம்பல மொழிந்து" (அகம். 239) ஒ.நோ: தேய் - தே – தீ (நெருப்பு).

தீம் - தீமு தீவு, தீவுதல் = இனித்தல், இனிமையாதல். ம-வ. போலி, ஒ.நோ: தாமணி தாவணி.

நாம் நாவு (கன்னடம்).

தீவிய = இனிய (செ.எ) இனியவை (பெ.) "செவ்விய தீவிய சொல்லி” (கலித். 19) தீவியது – தீயது = இனியது (யாழ். அக.) தீவம் - தீயம் = இனிமை (யாழ். அக.) ஒ.நோ: தீவர் - தீயர்.

இனி, தீவியம் - தீவம் - தீயம் என்றுமாம்.

-

ஒ.நோ: ஓவியம் ஓவம்.

தீவு - தீ. தீப்பு = இனிப்பு

(தீ தீ) - (தீத்தீ) - தித்தி. தித்தித்தல் = இனித்தல்.

+

ஒ.நோ: (சீ + சீ) – சீச்சீ - சிச்சி

“சிச்சி யெனத்தன் மெய்ச்செவி பொத்தி” (கம்பரா. மாரீசன். 76)