உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைச்சொல்லாக்க நெறிமுறைகள்

109

வினையாகவும் வழங்குகின்றது. இம் முறையில் தமிழிலும் சொற்களை வழங்கிக்கொள்ளலாம்.

இம்மட்டும் கலைச்சொல்லாக்க விதிகளும் நெறிமுறைகளும் ஒருவாறு கூறப்பட்டன. தமிழிற் கலைச்சொல்லாக்குவார் எவராயினும் ஆகுக; மேற்கூறிய நெறிமுறைகளை யறிந்து கடைப்பிடிக்க; அஃதன்றி, "அரசன் முத்தினால் அரம்பை, 'கொண்டவன் பலமிருந்தால் குப்பை யேறிச் சண்டைபோடலாம்' என்ற பழமொழிகட் கிணங்க நடப்பாராயின், அம்பலத்திற் கிழுக்கப்படுவர் என்பதை அறிவாராக.

"செந்தமிழ்ச் செல்வி" மடங்கல் 1941