உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்வேர் காண்வழிகள்

67

ரிய மொழிகள் திரிபுடை மொழிகளாதலின், அவற்றிற் பல சொற்கள் வேர்ப்பொருள் தோன்றாவாறு திரிந்திருப்பதுடன், பல இடுகுறிச் சொற்களும், சிறப்பாகச் சமற்கிருதத்தில் அமைந்துள்ளன. அதனால் சமற்கிருதத்தை அடிப்படையாக வைத்தாய்ந்த மேலை மொழிநூலாசிரியர், எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகளே என்பதை அடிப்படை நெறிமுறையாகக் கொண்ட வண்ணனை மொழிநூல் (Descriptive Linguis- tics) என்னும் வழுப்பட்ட மொழியியல் வகையை உலகமுழுதும் பரப்பி வருகின்றனர். உண்மையான வரலாற்று மொழியாராய்ச்சியால் சமற்கிருத இழிவும் ஆரிய ஏமாற்றமும் உலகிற்கு வெளிப்பட்டுவிடுமே யென்று அஞ்சும் வடமொழியாளர், புதிதாய்த் தோன்றியுள்ள வண்ணனை மொழிநூல் தமக்கொரு கேடகமாயிருப்பது கண்டு, அதனை நெஞ்சார நினைந்து வாயார வாழ்த்தி வளர்த்து வருகின்றனர். அவரடியாரான கொண்டான்மாரும் தமிழைக் காட்டிக் கொடுப்பதற்கு இது தலைசிறந்த வழியா யிருப்பதறிந்து, இதனைத் தலைமேல் தாங்கி நிற்கின்றனர்.

"

ஒரு பொருளை எங்கெங்குந் தேடியும் காணமுடியாதென்று முழு நம்பிக்கை கொண்டவனுக்கு எங்ஙன் தேடன் முயற்சி பிறக்கும்? எல்லாச் சொல்லும் இடுகுறிகளே யென்றும், எல்லா மொழிகளும் ஆயிரம் ஆண்டிற்கொருமுறை அடியோடு மாறிவிடுகின்றன என்றும் நம்புகின்ற வனுக்கு எங்ஙன் மொழியாராய்ச்சி வேட்கை எழும்? ஆதலால், வண்ணனை மொழிநூல் அறிவுவளர்ச்சிக்கு மாபெரு முட்டுக்கட்டை யென்று அறவே புறக்கணிக்க.

17. பகுத்தறிவைப் பயன்படுத்தல்

=

எ-கா: வடவை = வடமுனையில் தோன்றும் ஒருவகை நெருப்பு அல்லது ஒளி. வடம்-வடவை (பிங்.) வடவனல். “வடவைக் கனலை வைத்தூதி” (அந்தகக்கவி வீரராகவர் தனிப்பாடல்.)

வடம் – வடந்தை = வடகாற்று, வடவைத் தீ.

66

66

“சுடர்ந்தெரி வடந்தைத் தீயும்" (காஞ்சிப்பு. இருபத். 384)

‘அக்கடலின்மீது வடவனல் நிற்க விலையோ" (தாயுமானவர்.)

ஒ.நோ: Aurora Borealis = Northern Light.

இங்ஙனம் வடவை என்பது தென்சொல்லென்றும் வடமுனை நெருப்பின் பெயரென்றும் தெளிவாயிருக்கவும், அதை வடவா என்று திரித்துப் பெண்குதிரை என்று பொருளுரைப்பர் வடவர். இத்தகைய சொல்லியல்களிற் பகுத்தறிவைப் பயன்படுத்துவது இன்றியமையாதது. 18. அஞ்சாமை

ஆயிரக்கணக்கான தென்சொற்களை வடவர் கடன்கொண்டிருப்ப தால், அவற்றையெல்லாம் தென்சொல்லென்று ஒப்புக்கொள்ளின், சமற்கிருதத்திற்குத் தமிழே மூலம் என்பது வெட்டவெளியாம். அதனால்,