உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ககர சகரப் பரிமாற்றம்

75

சேரன் என்னும் பெயரின் மூலம் அல்லது வரலாறு வேறு வகையாக வும் இருந்திருக்கலாம். இற்றை அறிவு நிலையில் நாம் காட்டக்கூடிய மூலம் சாரல் என்பதே. உண்மை எங்ஙனமிருப்பினும், மூவேந்தர் குடிகளும் தூய தமிழ்க் குடிகளாயிருந்தது போன்றே,. அக் குடிப்பெயர்களும் தூய தமிழ்ச் சொற்களாகவே இருத்தல் வேண்டும் என்பதை மட்டும் உளத்தில் உறுதியாய் இருத்(து)தல் வேண்டும். மேலையாரிய மொழிகளில் ககரம் சகரமாவதே இயல்பு.

- -

எ-கா : birk - birch, Kirk - church, whilk - which sik - such,bik - bitch, caster - chester, particle - parcel, kenotopion - cenotaph.

இவ் வாரிய மொழியியல்பை அடிப்படையாகக் கொண்டே, தமிழிலும் அவ்வாறு ககரமே சகரமாகுமெனக் கொள்கின்றனர். மேலை மொழிநூலார், தமிழ் வடக்கினின்று வந்ததென அடிப்படையில் அவர் தவறினதே இதற்குக் காரணம். தமிழ் ஆரியத்திற்கு முந்தியதும் மூலமுமாதலின் மொழிநூல் திறவுகோல் தமிழிலேயே உள்ளது. இதை அவர் அறியார். அறியுங்காலம் அணுகி வருகின்றது.

இரா.பி. சேதுப்பிள்ளை மணிவிழா மலர் 1961