உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

வெள் என்னும் இயற்சொல்லடிப் பிறந்த வெய்ய, வெய்யோன் முதலிய சொற்கள் வெப்பத்தைப் போன்றே விருப்பத்தையும் உணர்த்து கின்றன. இதனால், தமிழரின் முன்னோர் ஒருகாலத்தில் குளிர்நாட்டிலும் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்று சொல்லாராய்ச்சி யில்லார் முடிவுகொள்ள நேர்கின்றது. கடல் கொண்ட குமரிநாட்டின் தென்கோடி வெப்ப மண்டலத் தின் தென்னெல்லைக் குட்பட்டதே.

தமிழ்ச்சொற்கள் பெரும்பாலும் உகரச் சுட்டடியிற் பிறந்துள்ளன. உ- உல் என்னும் மூல அடி, குல், சுல், துல், நுல், புல், முல் என்னும் ஆறு வழியடிகளாகப் பிரிந்தும், திரிந்தும், பல்லாயிரக்கணக்கான சொற்களைப் பிறப்பித்துள்ளன. வகரம் உகரமுதல் கொள்ளாமையால், வுகர அடியாகப் பிறந்த சொல் ஒன்றுமில்லை. ஆதலால், ஒலிக்குறிப்புச் சொற்களொழிந்த வகர மெய்ம்முதற் சொற்களெல்லாம் முதலடியினின்றோ மகர முதலடியினின்றோதான் தோன்றியுள்ளன.

பகர

வெள் என்னும் இயற்சொல், வெப்பப் பொருளில் மெள் என்னும் அடியினின்றும், விருப்பப் பொருளில் பெள் என்னும் அடியினின்றும் திரிந்துள்ளது.

முள் முளி. முளிதல் = எரிதல். முளி - IO - IOர். மிளிர்தல் = எரிதல், விளங்குதல். மிள் - மின் = ஒளி. ஒளி நெருப்பின் இயல். முள் - மிள் - மெள் - வெள் வெய் - வெய்ய = வெப்பமான. வெய்யோன் = வெப்பமானவன், கதிரவன், கொடியோன். ளகரமெய் யகரமாகத் திரிதல் பெரும்பான்மை.

எ-கா :

கொள் - கொய், தொள் - தொய். பிள் - பிய். பொள் - பொய் - பை. வள் (வய்) வை வ கூர்மை.

=

புல்லுதல் பொருந்துதல், விரும்புதல். புல் புர் - புரி. புரிதல் விரும்புதல்.

புல் – புள் - பிள்

||

பிள் - பிண் - பிணா, பிணவு, பிணவல், பிணை. பிள் - பெள் - பெண் - பேண். பெட்டல் = விரும்பல்.

"பிணையும் பேணும் பெட்பின் பொருள.” (தொல்.உரி. 40)

-

பெள் - வெள் - வெய்ய = விருப்பமான, வெய்யோன் = விரும்பிய வன், காதலன்.

வெள் - வெய் - வெய்ம்மை - வெம்மை = வெப்பம், விருப்பம். திரிசொற்களில் யகரமெய் தொகுவது இயல்பே.

எ-கா :வேய் - வேய்ந்தோன் வேய்ந்தோன் - வேந்தன். தேய் - தேய்வு - தேவு -

தேவன்.

-

இங்ஙனம், சொற்களின் மூலத்தை ஆழ்ந்தாய்ந்துதான் காண வொண்ணும்.