உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள்

81

வடசொல் என்பது தவிர ஏனையவெல்லாம், தலைக்கழகக் காலத்தினின்று வழிவழி வந்தனவேயாம். ஆதலால், பிற்காலத் திரிமொழிகளாகிய ஆரியத் தையும் அரைச் செயற்கை இலக்கிய நடைமொழியாகிய சமற்கிருதத் தையும் அடிப்படையாக வைத்தாய்ந்து, மேலையர் உண்மைக்கும் உத்திக்கும் மாறாகக் கூறும் போலி நெறிமுறைகள் கொள்ளத்தக்கனவல்ல.

அவையாவன :

1. மலைவாணரெல்லாரும் பழங்குடி மக்களெனல்

மொழியில்லாத முதற்கால (Primitive) அநாகரிக மாந்தரெல்லாரும், இயற்கை விளைவுண்டு மரத்திலும் குகையிலும் தங்கி மலையில் வதிந்தது உண்மையே. ஆயின், நீலமலைத் துடவரும் கோத்தரும் பெலுச்சித்தானப் பிராகுவீயரும், முதற்கால மாந்தர் வழியினர் அல்லர். அவர்கள் நாகரிகக் காலத்தில் கொள்ளைக்கும் போருக்கும் அஞ்சிப் பாதுகாப்பைத் தேடிக் குறிஞ்சி நிலத்திலிருந்தும் முல்லை நிலத்திலிருந்தும், சிறுபான்மை மருத நிலத்திலிருந்தும், மலையேறி உச்சிக்குச் சென்று குடிபுகுந்தவரின் வழியினரே. இதை அவர் ஊணுடை யுறையுளும் தொழிலும் மொழியும் காட்டும். அவர்கள் மொழி கீழ்நிலத்து நாகரிக மொழியின் கொச்சைத் திரிபே.

எ-கா : தமிழ்

துடவம் ஒன்

யான், நான்

ஐயன் (தந்தை)

இன், எயி

மகன்

மக்

எருது

எஸ்த்

ஒன்று

ஒத்

வற்க்ஸ் குபிட்

உறங்கு கும்பிடு

முந்துகாலத் தமிழர் நிலை குமரிநாட்டிலேயே கழிந்துவிட்டது.

2. சொற்குறுக்கமெல்லாம் வேர்ச்சொல்லெனல்

ஒரு மொழியின் சொற்கள் முந்துநிலையிலும் கொச்சை நிலையிலும் குறுகி நிற்கும். மலைவாணர் பேசுவது கொச்சைநடை யாதலின், அவர் சொற்கள் பெரும்பாலும் ஓரசையாகவும் ஓரெழுத்தாகவும் குறுகி நிற்பது இயல்பு. இதை வேர்ச்சொல்லாகக் கருதி இற்றை மலைவாணரைப் பழங்குடி மக்கள் என்பதற்குச் சான்றாகக் கொள்வர் மேலையர்.

எ-கா : தமிழ் ஏன் (யான்) இரு

பிராகுவீ

அர்

அவர்கள்

ஓவ்க்

வாய்கள்

பாக்