உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

இன்று பெரும்பாலும் சமற்கிருதத்திலிருப்பதும், சமற்கிருதம் தேவமொழி யென்றும் பிராமணர் பிறப்பி லுயர்ந்தவரென்றும் உயர்த்தப்பட்டிருப்பதும், மேனாட்டார் மேலோட்டமாய்க் காணும் வேற்றுமை நிலைமைகளாகும். 6. சமற்கிருதம் ஆரியத்தின் மூலம் எனல்

தமிழின் அல்லது தமிழரின் பிறந்தகம் குமரிநாடென்றும், தமிழ் திரிந்து திரவிடமும் திரவிடம் திரிந்து ஆரியமும் ஆயிற்றென்றும், மேனாட்டினின்று வந்து வழக்கற்ற ஆரியம் வடநாட்டுப் பிராகிருதங்க ளொடு கலந்து வேதமொழி யாயிற்றென்றும், வேதமொழி தமிழொடு கலந்து சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழி (Literary Dialect) தோன்றிற் றென்றும், உண்மையறியாத அல்லது அறிய விரும்பாத மேலை மொழி நூலார், சமற்கிருதத்தையே ஆரியத்தின் மூலமென்று கொண்டு, சட்டைக் கேற்ப உடம்பை வெட்டுவதுபோலப் பல ஒவ்வாத நெறிமுறைகளைக் கொண்டு, வண்ணனை மொழிநூல் (Descriptive Linguistics) என்னும் வழுவியற் போலி யறிவியலை வளர்த்து வருகின்றனர். இதன் விளக்கத்தை, இனி வெளிவரும் என் A Guide to Western Tamilologists என்னும் ஆங்கில நூலிற் கண்டு தெளிக.

-

கட்டுரைப் பொழில் - கரந்தைத் தமிழ்ச்சங்க மணிவிழா மலர் 1973