உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

இலக்கணக் கட்டுரைகள்

உலகத்திலுள்ள மூவாயிரம் போன்ற மொழிகளுள், தமிழைப் போன்று அடிமுதல் முடிவரை தருக்கப் பொருளாக விருப்பது வேறொன்றுமில்லை. பண்டை ஆரியப் பூசாரியர், தம் போன்றே தம் வழியினரும் காலமெல்லாம் தமிழரை அடிப்படுத்தி மேனத்தாக வாழ்தற் பொருட்டு, தம்மை நிலத் தேவரென்றும் தமிழ்வழிப்பட்ட தம் இலக்கிய மொழியைத் தேவமொழி யென்றும் கூறி மூவேந்தரையும் ஏமாற்றித் தமிழரே தம் இனத்தைப் பகைக்கவும் தம் மொழியைப் புறக்கணிக்கவும் குமுகாயத் துறையிலும் இலக்கியத் துறையிலும் வழிவகுத்து வைத்திருக்கின்றனர். காலப்போக்கில் பிராமணர் இதன் புரைமை கண்டு திருந்த நேரினும், காட்டிக் கொடுக்குந் தன்னலக்காரரான வையாபுரிகள் அதைத் தடுப்பதிற் கண்ணுங் கருத்துமாய் இருந்து வருகின்றனர். எல்லா நாட்டிலும் காட்டிக் கொடுப்பார் இருக்கவே யிருக்கின்றனர். ஆயினும், வெற்றித் தொகையினர் தமிழ்நாட்டிலேயே

உள்ளனர்.

ஓர் எழுத்தைக் குறித்தால் ஒலியிலும் வரியிலும் அது வடவெழுத்து; ஒரு சொல்லைச் சொன்னால் அது வடசொல்; ஒரு மண்டிலத்தை யாத்தால் அது வடமொழி யாப்பு (விருத்தம்); ஒரு நூலைப் போற்றினால் அது வடநூலின் வழிநூல்; ஒரு புலவரைப் பாராட்டினால் அவர் பிராமணருக்குப் பிறந்தவர்; ஒரு தெய்வத்தைத் தமிழ்த்தெய்வ மென்றால் அது ஆரியத் தெய்வம்; ஒருவன் தன் முன்னோர் தெய்வத்தை வழிபடச் சென்றால், அவன் எட்டத்தில் நிற்க இன்னொருவனே அவனுக்காக விளங்காத அயன் மொழியில் வழிபடவேண்டும்; ஒருவன் தன் தாய்நாட்டைத் தன்னா டென்றால், அவனும் பிறனைப்போல் வெளிநாட்டினின்று வந்தேறியே என்பது பல்கலைக்கழக வெளியீடு. இங்ஙனம் எதையெடுத்தாலும் தமிழனுக்கு உரிமையில்லாவாறு வரலாறு திரித்தெழுதப்பட்டுள்ளது.

கடந்த மூவாயிரம் ஆண்டாக அடிமைத்தனத்திற் பிறந்து வளர்ந்து வந்திருப்பதனால், அறிவாராய்ச்சியும் உரிமையுணர்ச்சியும் விடுதலைப் பேறும் மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும், தமிழினத்தில் தலைமையான வகுப்பானும் அயலானைத் தன் இல்லத்தில் உண்பிக்கும் துப்புரவும் உயர்வும் தனக்கில்லையென்று நம்பித் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டிருக்கின்றான். இவ் வேற்றத் தாழ்வு வெளிப்படையாகவும் தகுதி யுடையது போன்றும் இருப்பதால், தமிழை மீண்டும் அரியணை யேற்றும் தமிழாராய்ச்சியாளனுக்கு நெஞ்சுரத்தின் தேவை பன்மடங்கு மிகுகின்றது.

வ்

தமிழ் உலக முதல் உயர்தனிச் செம்மொழியாயினும், ஆரியத்தாற் கட்டுப்பாடாகவும் வெற்றித் திறமாகவும் மறைக்கப்பட்டு வருவதனாலும், தமிழ் ஆசியாவின் தென்கோடியில் வழங்குவதனாலும், தமிழர் எல்லா வகையிலும் ஆரியத்திற்கு அடிமைப்பட்டிருப்பதனாலும், இதுவரை தமிழின் பெருமையைத் தமிழர் வெளியுலகத்திற்குப் போதிய ய அளவு எடுத்துக்காட்டாமையாலும், உட்பகைவரான வையாபுரிகளின் கையே