உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'ஐ ஔ' ‘அய் அவ்' தானா?

117

5. பிராமணர் நிலத்தேவரென்றும், வடமொழி தேவமொழியென்றும் தமிழ்ப் பொதுமக்களால் நம்பப்பட்டமை.

6. மாக்கசுமுல்லர் கூட்டம் சமற்கிருதமே ஆரிய மூலமொழி யென்றும், அனைத்துலகத் தாய்மொழியென்றும், கொட்டமடித்துக் கொண்டிருந்தமை.

7. கால்டுவெலார் குமரிநாட்டுண்மை யறியாது, கொற்கையே தமிழ் நாகரிகத் தோற்றகம் என்று கொண்டமை.

8. அவர் ஏதேன் தோட்டக் கதையை எழுத்துப்படி உண்மை யென்றும், தமிழரின் முன்னோர் மேனாட்டினின்று வந்தவ ரென்றும், நம்பியமை.

அரை நூற்றாண்டு தமிழ்நாட்டு நடுவில் வாழ்ந்து தமிழ் பேசித் தமிழாய்ந்த பின்பும், தமிழில் அண்ணன் தம்பி அக்கை தங்கையென்று மூத்தவரையும் இளையவரையுந்தான் குறிக்கச் சொல்லுண்டென்றும், brother, sister என்பதுபோல உடன்பிறந்தாரைக் குறிக்கும் பொதுச்சொல் இல்லை யென்றும், அவர் கூறியிருப்பதை நோக்கும்போது, தமிழ் நெடுங்கணக்கைப் பற்றிய அவர் தவற்றுக் கூற்று தானாக வலியிழத்தலைக் காண்க.

உடன்பிறந்தான் உடன்பிறந்தாள் என்னும் உலக வழக்கும், உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா”

(மூதுரை. 20)

என்னும் இலக்கிய வழக்கும், அவர்க்குத் தெரியாமற்போனது மருட்கை விளைப்பதே.

சிலப்பதிகாரக் காடுகாண் காதையில் “அடியிற் றன்னளவு..... தென்னவன் வாழி" (17-22) என்னும் பகுதிக்கு வரைந்த உரையில், அடியார்க்குநல்லார்,

66

..கடல் பொறாது... அவனது தென்றிசைக் கண்ணதாகிய பஃறுளியாற்றுடனே பலவாகிய பக்க மலைகளையுடைய குமரிக் கோட்டையும் கொண்டதனால், வடதிசைக்கண்ணதாகிய கங்கையாற் றினையும் இமயமலையினையும் கைக்கொண்டு ஆண்டு, மீண்டும் தென்றிசையை ஆண்ட தென்னவன் வாழ்வானாக வென்...கடல் எறிந்து காண்ட எல்லையளவும் வடபால் தனதாக்கி மீண்டும் தென்றிசையை ஆண்டவனென ஒப்பாக்கலு மொன்று...”

என்று கூறியிருப்பதால், பனிமலை வரைப்பட்ட அளவு (எழுநூற்றுக் காவதவாறு) ஏறத்தாழ ஈராயிரங்கல் தொலைவு தெற்கே நீண்டிருந்த நிலப்பரப்பு முழுகிப் போயிற்றென்று அறியப்படும். இங்ஙனம் முழுகிப் போனது முற்றும் முத்தமிழ் நாட்டுள் பாண்டிநாடென்னும் ஒரு நாடே.