உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எகர ஒகர இயற்கை

135

பொருள் விளங்காவாறும் தாறுமாறாக எழுதப்பட்டது கண்டு, அம் முனிவர் எகர ஒகரக் குறிலுக்கு மேற் குறுங்கீச்சும் மெய்க்கு மேற்சுழியும் வைத்தெழுது மாறு ஏற்பாடு செய்தார்.

“நீட்டல் சுழித்தல்

குறின்மெய்க் கிருபுள்ளி”

என்பது அவரது தொன்னூல் விளக்க நூற்பா.

(12)

இனி, ஏகார ஓகார உயிர்மெய்கட்குக் கே, கோ என்று இரட்டைச் சுழிக்கொம்பு அமைத்ததும் தாமேயென்று அவர்தம் கொடுந்தமிழ் நூலிற் கூறியிருக்கின்றார்.

எகர ஒகரக் குறில்களும் உயிர்மெய்களுமோ, இன்று தொல் காப்பியரின் புள்ளிபெறாதும், வீரமாமுனிவரின் நெடும்புள்ளி (நீண்ட புள்ளி) யென்னும் குறுங்கீச்சுப் பெறாதும், ஏகார வடிவு கீழ்ச்சாய்ப்புக் கீச்சும் ஓகார வடிவு கீழ்ச்சுழியும் பெற்றும், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஏனைக்குறில் நெடில்கள்போல இயற்கையாக வேறுபட்ட வடிவங் கொண்டதுபோலத் தோன்றுகின்றன.

இதுகாறுங் கூறியவற்றால், "தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்றும், ஒரு தமிழெழுத்தும் பிராமியெழுத்தினின்றோ வடவெழுத்தி னின்றோ தோன்றவில்லை யென்றும், தொல்காப்பியம், இசைநுணுக்கம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல் முதலிய கிறித்துவிற்கு முற்பட்ட பண்டை நூல்களெல்லாம் தமிழெழுத்திலேயேயன்றிப் பிராமியெழுத்தில் ஏட்டுச் சுவடிகளில் எழுதப்படவில்லை யென்றும், கி.மு. 3ஆம் நூற்றாண்டுப் பிராமிக் கல்வெட்டுப் பண்டைத் தமிழெழுத்திற்குச் சான்றாகாதென்றும், பிராமியெழுத்தும் வடவெழுத்தும் தமிழெழுத்தினின்றே திரிந்தனவென்றும், தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழியென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க.

"நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீள்மரமாம் நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாம் சீரணவு

-

காட்டொன் றொழிப்ப இசையாம் அதனளவு

மீட்டொன் றொழிப்ப மிடறு.

நீண்மரத்தி லொன்றேற நேரிழையார் கூந்தலாம்

பூநெருப்பி லொன்றேறப் பூங்குளமாம்

-

பேணுங்

கழுத்திலொன் றேற இசையாம் இசையின்

எழுத்திலொன் றேறவாங் காடு"

என்பன, தொல்காப்பியர் கூற்றுக்கு எடுத்துக்காட்டாக இடைக்காலத் தெழுந்த மாத்திரைச் சுருக்கம், மாத்திரைப் பெருக்கம் என்னும் சொல்லணிப் பாட்டுகள்.

- “செந்தமிழ்ச் செல்வி" மார்ச்சு 1979