உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

இலக்கணக் கட்டுரைகள்

அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால் மயற்கை யறுத்தார் மறைமலை யடிகள் அடிமையு மதமும் அளைந்தமை கண்டே விடுதலை பெறவழி வேறிலை யென்றே கடவுள் இலையெனுங் காரங் கலந்து மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார் மூவர் குறிக்கோள் முடிபும் ஒன்றே அடிமை யொழித்த லல்லதை எழுத்தின் வடிவை யொழித்தல் பெரியார்க் கில்லை குறுகிய நோக்கிற் கொள்கை பிறழ்ந்து பண்டம் விட்டுப் படிவம் பற்றித்

தமிழர் ஒற்றுமை தடுத்துப் பகைவரைத் தம்மொடு சேர்த்துத் தமிழுணர் விழந்து பெரியார் பெயரைக் கெடுப்பார்

தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.

"செந்தமிழ்ச் செல்வி" ஏப்பிரல் 1979