உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

2. ஏவலொருமை

இலக்கணக் கட்டுரைகள்

‘நடவா மடிசீ’ என்னும் ஏவல்வினைச் சூத்திர உரையில் செய் என்னும் பகுதியொடு ஆய் விகுதி புணர்ந்து செய்யாய் என நின்று, பின்பு அவ் விகுதி கெட்டு மீண்டும் செய் என நிற்பதே ஏவலொருமை யெனச் சிலர் உரைத்தார்.

விகுதி புணர்ந்து கெடுவது இங்கிலீசு சமற்கிருதம் போன்ற ஆரியமொழிகட் கியல்பேயன்றித் தமிழுக்கியல்பாகாது. Cut, set என்னும் வினைகள் இறந்த காலத்தில் விகுதி பெற்றிழந்து மீண்டும் பகுதி யளவாகவே யிருக்கும்.

விகுதி புணர்ந்து கெடுவதாயின், அங்ஙனம் கெடாத சில வினைகளு மிருத்தல்வேண்டும். அங்ஙன மின்மையின் செய் என்னும் வாய்பாடே ஏவலொருமை யென்று துணியப்படும்.

"

மேலும், செய்யாய் என்பது முன்னிலை எதிர்மறை ஒருமை எதிர்கால வினைமுற்றுச் சொல். அது ஓசை வேறுபாட்டான் வேண்டு கோளாங்கால் செய்யாயா என வினாப்பொருள் பட்டுப் பின்பு அவ் வினாவே செய் என உடன்பாட்டுப் பொருள் தந்து நிற்கும்.

ஏவலொருமை விகுதி புணர்ந்து கெடுவதாயின் ஏவற்பன்மையும் விகுதி புணர்ந்து கெடல் வேண்டும். அங்ஙனம் கெடாமையின், ஒருமை விகுதி மட்டும் புணர்ந்து கெடுமென்றல் பொருந்தாது.

இன்னோரன்ன இடங்களிலெல்லாம் வடமொழியியல் வேறு தென்மொழியியல் வேறு என்பதைத் தெற்றென வுணர்தல் வேண்டும். அங்ஙனம் உணராதாரே,

“செய்என் ஏவல் வினைப்பகாப் பதமே

என வெள்ளிடையாய் ஆசிரியர் கூறினும் அதனையும் உணராது இவ்வாறு மயங்கக் கூறுவர்.

3. தொழிற்பெயர் விகுதி

பாடு என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி யென்றும், கோட்பாடு என்பது அதற்குதாரண மென்றும் மாணவர்க்குப் பாடமாயுள்ள இலக்கணங்க ளெல்லாம் மயங்கிக் கூறாநிற்கும்.

கோள் என்பது ஒரு முதனிலை திரிந்த தொழிற்பெயர். பின்பு படு என்னும் துணைவினை சேர்ந்து அதுவும் முதனிலை திரிந்து பாடு என்றாயிற்று. பாடு என்பது விகுதியாயின் கோள் என்பது பகுதியாதல் வேண்டும். அங்ஙனமாகாமையின் அஃதுரை யன்மை யறிக. புறப்படு, கடப்படு என்பவை புறப்பாடு கடப்பாடு என்றானாற்போலக் கோட்படு என்பதும் கோட்பாடு என்றாயிற்று.