உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

இலக்கணக் கட்டுரைகள்

நன்னூலாரும்,

"பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி

ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல்

எனத் தெள்ளிதிற் றெரித்தார்.

அதுவுமன்றி,

“இன்ன தின்னுழி இன்னண மியலும்

99

என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா நல்லோ ருரிச்சொலில் நயந்தனர் கொளலே.'

எனவும் புறனடை யோதினார்.

(நன். 442)

(நன். 460)

இதில் பிங்கல முதலிய நிகண்டுகளை யெல்லாம் உரிச்சொல் லென்றமையும், அவை செய்யுட்குரிய பலவகை யருஞ்சொற்களுக்கும் பொருள் கூறுதலையும், அவற்றுள் காங்கேயர் நிகண்டு உரிச்சொல்லென்றே பெயர் பெற்றமையும் கண்டுகொள்க. தமிழறிவும் திரிசொல் வழக்கும் மிக்கிருந்த காலத்தில் செய்யுட் சொற்களெல்லாம் இயற்சொற்போல் எளிதாய்ப் பொருள் விளக்குவனவாயின. பின்பு அவை குன்றிய காலத்து அவற்றைத் தனித்தனி அகராதி யியல்பில் எடுத்தோதிப் பொருள்கூற வேண்டியதாயிற்று.

"பெயரும் வினையும்போல ஈறுபற்றிப் பொருளுணர்த்த லாகா மையின், தம்மை யெடுத்தோதியே அப் பொருளுணர்த்தப்படுதலானும்" என்றார் சேனாவரையரும். ஒவ்வொரு சொல்லையும் தனித்தனி யெடுத்தோதிப் பொருள் கூறுவதென்றால், அது செய்யுட் சொல்லாய் உலக வழக்கி லில்லாததென்பது எளிதிற் புலனாம். உரிச்சொற்கட்கெல்லாம் பொருள் கூறுவதைத் தொல்காப்பிய உரியியலுட் கண்டுகொள்க. உரியிய லென்பதே செய்யுட்குரிய அருஞ்சொற்கட் கெல்லாம் பொருளுணர்த்தும் அகராதித் தொடக்கம். பின்பு அது விரிவான நூலாய் நீண்டு 'நிகண்டு எனப்பட்டது. நிகள்-நீள். அகலம் நிகளம் என்பதோர் பண்டை வழக்கு. நிகளம் - சங்கிலி; நீளமாயிருப்பது. நிகளம் நீளமென மருவிற்று.

"பொருட்குப் பொருடெரியி னதுவரம் பின்றே

99

"மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா'

99

(தொல். சொல். 874)

(தொல். சொல். 877)

எனத் தொல்காப்பியர் உரியியலுட் பொதுப்படக் கூறுவதும் இதனை வலியுறுத்தும்.

பெயரும் வினையுமே முதன்முத லுண்டான சொற்கள். அவற்றி னின்றும் பிற்காலத்து இடைச்சொல் வகுக்கப்பட்டது. அதற்கும் பின்பு உரிச்சொற் பாகுபாடுண்டாயிற்று.