உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

இலக்கணக் கட்டுரைகள் சாத்தன் வருதற்கு முரியன் என்பது வராமைக்கு முரியனென்பதைத் தழுவி நிற்றலின், அது ஏனையது தழீஇய எச்சவும்மையன்றி எதிர்மறை யும்மை யாகாது. அது பிறிதொரு பொருளைத் தழுவாவிடினும் பிறிதொரு வினையைத் தழுவி நிற்குமாறறிக. சாத்தன் வருதற்கு முரியன் என்பது எதிர்மறை யும்மையாயின், சாத்தன் வராமைக்கு முரியன் என்பது உடன்பாட்டும்மை யாதல் வேண்டும், உடன்பாட்டை ஒழிபாயுடைத்தாய் நிற்றலின். அவ்வாறு உடன்பாட்டும்மை சூத்திரத்திற் கூறப்படாமையின் அஃதுரையன்மை யறிக. பின்னை யாதோதான் எதிர்மறையும்மை யெனின்; நாள் தவறினும் நாத்தவறான் என்புழி, நாள் தவறினும் என்பது தவறாது என்னும் ஒழிபை உடைத்தாய் நிற்றலின் அதுவே எதிர்மறையும்மை யென்க. கடல் வற்றினுங் கங்கை வற்றாது, தெய்வம் தீமை செய்யினும் கொற்றன் தீமை செய்யான் என்பனவும் இவை போன்ற பிறவுமதற் குதாரணம்.

"செந்தமிழ்ச் செல்வி" சுறவம் 1932