உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

இலக்கணக் கட்டுரைகள் பலசொல் ஒருபொருட் குரிமையும் தோன்றல், பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்திப் பொருள் வேறு கிளத்தல் என உரிச்சொற்குக் கூறிய நான் கிலக்கணங்களுள் முதல் மூன்றும் எல்லாச் சொற்கும் பொதுவாம். இறுதி யொன்றே உரிச்சொற்குச் சிறப்பாம். பெயரும் வினையும் இடையும் பெரும்பாலும் இசை குறிப்புப் பண்பிற் றோன்றியவையே.

எ-டு:

பெயர்

இசை ஒலி

வினை ஒலித்தல்

இடை

குறிப்பு

பண்பு

துணி

துணித்தல்

வெள்ளை வெளுத்தல்

ஒல்

துண்

வெள்

‘பெயரினும் வினையினும் மெய் தடுமாறி' என்னும் பகுதிக்கு, “பெயரினும் வினையினும் மெய்தடுமாறி என்பது உரிச்சொல்லாகிய உருபு பெயரின்கண்ணும் வினையின்கண்ணும் தடுமாறி எ-று. அவை தடுமாறுங் கால் பெயர் வினைகளைச் சார்ந்தும், அவற்றிற்கு அங்கமாகியும் வரும். 'உறுவளி' என்பது பெயரைச் சார்ந்து வந்தது. 'உறக்கொண்டான்' என்பது வினையைச் சார்ந்து வந்தது. 'உறுவன்' என்றவழிப் பெயர்க்கு அங்க மாயிற்று. 'உற்றான்' என்றவழி வினைக்கு அங்கமாயிற்று”, என்று உரை வரைந்தார் தெய்வச்சிலையார். இதனின்றும் பெயர் வினை இடைகள் தடுமாறுவதும் எளிதா யுணரப்படும். மெய்தடுமாறல் வடிவந் திரிதல்.

மெய்

சேவடி என்பதிற் பெயர் பெயரைச் சார்ந்து மெய் தடுமாறிற்று. ஒருப்பட்டான் என்பதிற் பெயர் வினையைச் சார்ந்து மெய் தடுமாறிற்று.

கண்ணன் என்பதிற் பெயர் பெயருக்கு அங்கமாயிற்று,

(கடைக்)கணித்தான் என்பதிற் பெயர் வினைக்கு அங்கமாயிற்று. வார்கயிறு என்பதில் வினை பெயரைச் சார்ந்து மெய் தடுமாறிற்று. சாக்குத்தினான் என்பதில் வினை வினையைச் சார்ந்து மெய் தடுமாறிற்று.

பாடகன் என்பதில் வினை பெயருக்கு அங்கமாயிற்று.

வந்தான் என்பதில் வினை வினைக்கு அங்கமாயிற்று.

தில்லைச்சொல் என்பதில் இடை பெயரைச் சார்ந்து மெய் தடு மாறிற்று. ஒல்ல ஒலித்தது என்பதில் இடை வினையைச் சார்ந்து மெய் தடுமாறிற்று.

மற்றவன் என்பதில் இடை பெயருக்கு அங்கமாயிற்று.

என்றான் என்பதில் இடை வினைக்கு அங்கமாயிற்று.