உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

இலக்கணக் கட்டுரைகள்

யன்றி, யாண்டும் தனிமொழியில் இயல்பு முதலாய் வருவதன்று. அங்ஙனம், இங்ஙனம் என்பன அவ்விதம் இவ்விதம் என்று பொருள் படுவனவாகும். அவ்வண்ணம், அவ்வகை, அவ்விதம், அப்படி என்னும் தொடர் மொழிகளிலுள்ள வண்ணம், வகை, விதம், படி என்னும் சொற்கள் தனித்து வழங்குவதுபோல, ஙனம் என்னும் சொல் தனித்து வழங்குவதன்று. அவன் செய்த விதம், அவன் செய்த ஙனம் என்னுந் தொடர்களைக் கூறிக் காண்க.

அங்ஙனம், இங்ஙனம் முதலிய தொடர்மொழிகளில் மெல்லோசை சிறந்திருத்தலின், மெலித்தல் (Nasalization) ஓசை மிகுதியும் பயில்கின்ற மலையாள வழக்கில் ஒருகால் ஙனம் என்னும் சொல் தனித்து வழங்கலா மென்று கருதிப் பலவிடத்துமுள்ள மலையாளரைக் கேட்டதில் அவர்களும் ஙனம் என்னும்சொல் தமிழிற்போலவே மலையாளத்திலும் தொடர்மொழிப் பகுதியாய் வழங்குவதன்றித் தனித்து வழங்குவதன்று என ஒருபடித்தாய்ப் பகர்ந்துவிட்டனர்.

அங்ஙனம், இங்ஙனம் என்னும் சொற்றொடர்கள் பண்டைக் காலத்தில் அங்கனம், இங்கனம் என வழங்கியுள்ளமை சங்க நூல்களா லறியப்படும். இக்காலத்திலும் சிலர் அங்கனம், இங்கனம் என்றே கூறுவதை உலகவழக்கிற்

காணலாம்.

சீவக சிந்தாமணி, விமலையாரிலம்பகம் 54ஆம் செய்யுளில், “ஈங்கனம் கனையிருளெல்லை நீந்தினாள்”

என்னும் ஈற்றடியிலும்,

புறநானூறு 208ஆம் செய்யுளில்,

‘ஈங்கனஞ் செல்க தானென என்னை

என்னும் அடியிலும், ஈங்கனம் என்ற வடிவம் வந்துள்ளது.

இங்கனம் எனினும் ஈங்கனம் எனினும் ஒன்றே. சுட்டும் வினாவும் நீள்வது இருவகை வழக்கினும் பெரும்பான்மை. அல்லது சுட்டுவினாப் பொருண்மையில் ஒரு குறிலும் அதன் நெடிலும் ஓரெழுத்தே யெனக் கொள்ளினும் அமையும். இனி, அங்கனம், இங்கனம் என்பவற்றின் முதல் வடிவுதான் யாதோவெனிற் கூறுதும்.

கண் என்னும் இடப்பெயர் சுட்டு வினாவொடு புணர்ந்து, அக்கண், இக்கண், எக்கண் என நிற்கும். பின்பு மெலித்தன் முறையால் அங்கண், இங்கண், எங்கண் எனத் திரியும்.

எ bl

'கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

JJ

(புறம். 15)

அங்கண் எனினும் ஆங்கண் எனினும் ஒன்றே. முன்னதன் நீட்சி பின்னதெனினும் ஒக்கும். இங்ஙனமே பிறவும்.