உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




LO

5

தழுவுதொடரும் தழாத்தொடரும்

"வேற்றுமை யைம்முத லாறா மல்வழி தொழில்பண் புவமை யும்மை யன்மொழி எழுவாய் விளியீ ரெச்சமுற் றிடையுரி

தழுவு தொடரடுக் கெனவீ ரேழே.’

JJ

(நன். 152)

இதன் உரையில், வை.மு. சடகோபராமாநுஜாசாரியாரும், சே. கிருஷ்ண மாசாரியாரும்,

"இவை தழுவுதொடர் எனவே, அவ் விருவழியிலும், தழாத்தொடரும் சில உள என்றாராயிற்று. 'நீர்க்குடம்' என்பது நீரையுடைய குடம் என விரிதலால், நீர் என்பது உடைய என்பதைத் தழுவிக் குடம் என்பதைப் பொருளால் தழுவாமல் தொடர்ந்ததனால், இது தழாத்தொடராகிய வேற்றுமைத் தொகை........ `மரத்தைச் சாத்தன் வெட்டினான்' என்பதில், மரத்தை என்பது வெட்டினான் என்பதைத் தழுவிச் சாத்தன் என்பதைப் பொருளால் தழுவாமல் தொடர்ந்ததனால், இது தழாத்தொடராகிய வேற்றுமை விரி. “சுரையாழ அம்மி மிதப்ப" என்பது சுரைமிதப்ப அம்மி ஆழ எனக் கூட்டப்படுதலால், சுரை என்பது ஆழ என்பதையும் அம்மி என்பது மிதப்ப என்பதையும் பொருளால் தழுவாமல் தொடர்ந்தன. இவை தழாத்தொடராகிய அல்வழிப்புணர்ச்சி. தழாத்தொடராவது நிலைமொழி யானது வருமொழியோடு பொருட் பொருத்தமுறத் தழுவாத தொடர். பொருட் பொருத்தமுறத் தழுவிய தொடர் தழுவுதொடர்" எனக் கூறியுள்ளனர்.

தழுவுதொடர், தழாத்தொடர் என்பன இலக்கணப் பொருத்தமுறத் தழுவுகின்ற தொடர், இலக்கணப் பொருத்தமுறத் தழுவாத தொடர் என்றே பொருள்படு மன்றி, பொருட் பொருத்தமுறத் தழுவுகின்ற தொடர், பொருட் பொருத்தமுறத் தழுவாத தொடர் என்று பொருள்படா.

சூத்திரத்துட் கூறப்பட்ட பதினான்கு தொடர்களுள், முதற் பதின் மூன்றும் தழுவுதொடரும், கடையொன்றும் தழாத்தொடருமாகும் என்பதைக் குறித்தற்கே, அடுக்குத் தொடர்க்கு முன் தழுவுதொடர் என்பதைக் கூறிப் பிரித்தனர். ஏனைப் பதின்மூன்றும் தழுவுதொடர் எனவே, இறுதி