உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நிகழ்கால வினை

39

'கரயுந்ந குட்டிக்கெ பால் உள்ளு.

'குரெக்குந்ந நாயி கடிக்க யில்ல.'

'மண்ணு திந்நுந்த மண்டெலியே போல.'

இம் மலையாளப் பழமொழிகளிலும் சொற்றொடர்களிலும் வந்துள்ள நிகழ்காலச் சொற்கட்கு நேர் தமிழ்ச்சொற்கள் வருமாறு:

மலையாளம்

தமிழ்

கடிக்குந்நது

கடிக்கின்றது

(வி.மு.)

பிடிக்குந்நது

பிடிக்கின்றது

(29. (4.)

அலக்குந்நோந்

அலக்குகின்றோன்

(வி.மு.)

போக்குந்நோந்

போக்குகின்றோன்

(வி.மு.)

நடக்குந்நோர்

நடக்கின்றோர்

(வி.மு.)

கறக்குந்நது

கறக்கின்றது

(தொ.பெ.)

உண்ணுந்நது

உண்கின்றது

(தொ.பெ.)

வெட்டுந்ந

வெட்டுகின்ற

(ALI.GT.)

உறங்ஙுந்ந

உறங்குகின்ற

(QLI.GT.)

கரயுந்ந

கரைகின்ற

(QILI.GT.)

குரெக்குந்ந

குரைக்கின்ற

(QILI.GT.)

திந்நுந்ந

தின்கின்ற

(QILI.6T.)

இவ் எடுத்துக்காட்டுகளால், செய்கின்றான் என்பது ‘செய்யுந்நாந்' என்றும், செய்கின்றது என்பது ‘செய்யுந்நது' என்றும், 'செய்கின்ற' என்பது 'செய்யுந்ந' என்றும், மலையாளத்தில் திரிவது தெளிவு. வினையா லணையும் பெயர்களுள், அஃறிணைப் பெயர்களாயின் அவற்றின் அகரமுதல் ஈறுகள்(அ, அவ) திரியாதும், உயர்திணைப் பெயர்களாயின் அவற்றின் ஆகாரமுதல் ஈறுகள் (ஆன், ஆள், ஆர்) ஓகாரமுதலாகத் திரிந்தும்*, வழங்குகின்றன.

எ-டு : தமிழ்

செய்கின்றது

செய்கின்றான்

மலையாளம்

செய்யுந்நது செய்யுந்நோந்

கின்று' என்னும் நிகழ்கால இடைநிலையைக் 'குந்நு' அல்லது ‘உந்நு’ என்று திரித்து வழங்கும் வழக்கம், சேரநாட்டில் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றது. அந் நாடு மழை மிகுதியாகப் பெய்யும் மலை நாடாதலின், அங்கத்துத் தமிழ்மக்கள் பேச்சில் மூக்கொலிகளான மெல்லின வெழுத்துகள் பேராட்சி பெற்றுவந்திருக்கின்றன.

ஆகாரத்தை ஓகாரமாக ஒலிப்பது மலையாளியர் இயல்பு. காலெஜ் (college) என்பதைக் கோலெஜ் என்றும், சாக் (chalk) என்பதைச் சோக் என்றும், அவர் ஒலித்தல் காண்க.)