உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




படர்க்கை 'இ' விகுதி

45

பால்காட்டும் விகுதிகள், இன்று எங்ஙனம் பெரும்பாலும் சுட்டுப் பெயர்களும் அவற்றின் குறுக்கமுங் குறையுமாயிருக்கின்றனவோ, அங்ஙனமே முற்காலத்தும் இருந்தன.

எ-டு : அது வலது, தனது, உளது, நல்லது.

இது வெளிது, வலிது, கரிது, புதிது

உது விழுது, பழுது, எருது (ஏருது), மருது.

அவன் – ஆன் - அன்: நல்லவன் - நல்லான் – நல்லன்.

அவர் - ஆர் - அர்: வல்லவர் - வல்லார் – வல்லர்.

இவர் - ஈர்

(மகளீர்) இர்: (மகளிவர்)

மகளிர்.

இகர வுகரவடி விகுதிகள் இக்காலத்துப் பெரும்பாலும் வழக்கிறந்தன. தமிழின் அசைநிலைக் காலத்தில் (Monosyllabic or Isolating Stage), சுட்டுச்சொற்கள் விகுதி பெறாமல் சுட்டடியாகவே வழங்கி வந்தன. இன்று வழங்கும் பலவின்பால் அகரவிகுதி அகரவிகுதி முந்துநிலையை முந்துநிலையை யுணர்த்தும்

அடையாளமாம்.

6T-(b):

எ-டு நல்ல = நல்லவை (பெயர்)

வந்த = வந்தன (வினைமுற்று)

ஒப்ப நாடி அத்தக வொறுத்தி”

(புறம்.10)

என்னும் அடியில், 'அத்தக' என்பது 'அதற்குத்தக' என்று பொருள்படுதலால், அசைநிலைக்காலத் துவக்கத்தில், சுட்டசைச்சொற்கள் எண்ணுணர்த்தாது சுட்டுப் பொருளொன்றே உணர்த்தி வந்தன என ஊகிக்க இடமுண்டு.

சேய்மை, அண்மை, முன்மை ஆகிய மூவகையிடங்களையும் முறையே சுட்டும் அ, இ, உ (அல்லது ஆ, ஈ, ஊ) என்பன, அசைநிலைக் காலத்தில் தனிச்சொல்லேயாகவும், அதற்கடுத்த புணர்நிலைக்காலத்தில் (Compounding Stage) தனிச்சொல்லும் கூட்டுச் சொல்லுமாகவும், அதற்கடுத்த விகுதிநிலைக்காலத்தில் (Inflexional stage) தனிச் சொல்லும் கூட்டுச் சொல்லும் விகுதியாகவும் வழங்கி வந்து, இன்று நாலாங்காலமாகிய கொளுவுநிலைக்காலத்தின் (Agglutinative Stage) பிற்பகுதியில், தனிச்சொல்லாய் வழங்குவதொழிந்து ஏனையிருவகை யாகவே வழங்கி வருகின்றன.

எச்சொல்லும் வேறொரு சொல்லின் விகுதியாக அமைந்தவுடன், தன் விதப்புப் பொருளை இழந்துவிடும். ஆகவே, சுட்டுச்சொற்களும் விகுதியா யமைந்தபின் தம் சுட்டுப்பொருளையிழந்து பால்மட்டும் உணர்த்தி நிற்கும்.

ஒருமைக்கும் பன்மைக்கும் வெவ்வேறு விகுதிகள் வகுக்கப்பட்ட காலத்தில், இகரச்சுட்டு ஒருமை விகுதிகளுள் ஒன்றாகக் கொள்ளப்பெற்றது. அன்று ஆண் பெண் பால்வேறுபாடு குறிக்கப்பெறாத காலமாதலால், ஆண்பால் பெண்பால் ஒன்றன்பால் ஆகிய முப்பாலுக்கும் பொதுவாகவே