உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குற்றியலுகரம் உயிரீறே (2)

65

இயைந்தனவாக இருக்க, நன்னூலார் கூறும் கருத்துகளோ இயற்கையோடு பொருந்தாதனவாய் இருக்கின்றன.'

""

தொல்காப்பியர் கூறும் குற்றியலுகரத்திற்கும் நன்னூலார் கூறும் குற்றியலுகரத்திற்கும், பெரிதும் வேறுபாடில்லை. "உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்," (164) என்று நன்னூலார் கூறியதே வேறுபட்டதும் வழுவுற்றதுமாகும். உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடாது; அதற்கு (உயிருக்கு) இடந்தந்து உள்ளேயே அல்லது உடனேயே நிற்கும்; பேய் கோட்பாட்டான் அல்லது தெய்வமேறினான் உயிர் முன்போல் உடனேயே நிற்கும்; பேய்கோட்பட்டான் அல்லது தெய்வமேறினான் உயிர் முன்போல் உடனேயே நிற்பது போல்.

தொல்காப்பியர் குற்றியலுகரம் சொன் முதலிலும் வரும் என்று கூறிய கூற்றுதான், இயற்கைக்கும் உண்மைக்கும் முற்றும் மாறாகும். நன்னூலார் அங்ஙனம் கூறியிலர்.

"குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்’

என்பது தொல்காப்பியம்.

99

(எழுத்து. 67)

சொன் முதலில் வரும் உகரத்தைக் குறுக்கியோ இதழ் குவியாதோ ஒலிக்கும் வழக்கம் தமிழருக்கு ஒருகாலத்தும் இல்லை. குற்றியலுகரத்தின் இயல்புகள் ஒலித்திரிபு ஒலிக்குறுக்கம் என இரண்டாகும். இவற்றுள் ஒலித்திரிபே மிக்கதாம். இதுபற்றிக் குற்றியலுகரத்திற்குச் “சாயும் உகரம் (நன் (107) என்று நன்னூலார் பெயரிட்டது மிகப் பாராட்டத் தக்கதாகும் இகரத்திற்கும் உகரத்திற்கும் இடைப்பட்டதே குற்றியலுகரம் அல்லது சாயுமுகரம். அதன் அளபு துல்லிபமாய் அரையென்பது பொருந்தாது. ஆயினும், குறுக்கங்களையெல்லாம் செம்பாகமாய்க் கொள்ளும் மரபுபற்றி, முற்றுகரத்திற் சரிபாதி குற்றுகரம் எனக் கொள்ளப் பெறும். உண்மையில் அஃது அரையளபினும் சற்றுக் கூடியதாகும்.

நுந்தை யென்பதின் மறுவடிவான உந்தை யென்னுஞ் சொல்லோ; உகப்பு, உங்கு, உச்சி, உஞ்சல், உணவு, உதவி, உப்பு, உம்பர், உயரம், உலக்கை, உவமை, உழவு, உள்ளம், உறவு, உன்னு முதலிய பிற உகர முதற் சொற்களோ; நுகர், நுங்கு, நுசுப்பு, நுடங்கு, நுணா, நுதல், நும்பி, நுரை, நுவல், நுழை, நுள்ளான், நுறுங்கு, நுனி முதலிய பிற நுகர முதற்சொற்களோ எல்லாம் முதலெழுத்து முற்றுகரமாயொலிக்கும்பொழுது, நுந்தை யென்னும் சொன் முதல்மட்டும் எங்ஙனம் குற்றுகரமா யொலிக்கும்? அங்ஙனம் ஒலிப்பார் இன்றொருவரும் இல்லையே! ஒருகால் அவர் காலத்து ஆசிரியர் சிலர் அங்ஙனம் திரித்தொலித்தார் போலும்! தமிழர் அங்ஙனம் ஒலியாமை கண்டே அவரும்,