உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குற்றியலுகரம் உயிரீறே (2)

இவற்றை விரித்துரைத்து விதியும் விலக்கும் அறிந்துகொள்க. உரைத்திருத்தலை நன்கு ஆய்ந்து தெளிக.

67 என்று

2. “நன்னூலார் மட்டுமல்லர். குற்றியலுகரம் பற்றிய தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரைகண்ட இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகி யோரும் ஓரளவுக்குத் தொல்காப்பியர் கருத்தை நன்கு விளக்கினும், பெருமளவுக்கு உண்மைக்குப் பொருந்தா உரைகளே கூறினர்."

நன்னூலார் கூற்றுகள், ஒன்று தவிர ஏனைய வெல்லாம் உண்மைக்குப் பொருந்தியவை யென்பது மேற்கூறப்பெற்றது. இனியும் கூறப்பெறும்.

பெரு என்னும் குறிப்புப் பெயரெச்சம் வல்லின மெய்ம்முதலொடு புணரும் பொழுதே, பெருங்கதை, பெருஞ்சோறு. பெருந்தலை, பெரும் பானை என மகரவொற்று மிகும்; உயிரொடு புணரின், பேரளவு, பேராவல், பேரீந்து, பேரூர் என அடி நீண்டே புணரும்.

பெருமை அளவு எனப் பண்புப் பெயரை நிலைச்சொல்லாக நிறுத்திப் புணர்ப்பதும் தவறென்பதை, என் ‘மொழித் திறத்தின் முட்டறுப்பது மொழி நூலே,' என்னும் கட்டுரையிற் காண்க.

3. 'குற்றியலுகரம் தனிமொழி இறுதியில் நிற்கும்போது அரை மாத்திரை பெறும் என்பதும், அது மெய்யீறு போலப் புள்ளி பெற்றும் வருமொழி உயிரேற இடங் கொடுத்தும் நிற்கும் என்பதும், அரைமாத்திரை அளவுள்ள குற்றுகரம் இயல்பானதே என்பதும், இடமும் பற்றுக்கோடும் காரணமாக ஒரு மாத்திரை அளவுள்ள முற்றுகரம் குறுகி அரை மாத்திரை யாக விகாரப்பட்டு நின்றது அன்று என்பதும், அஃது உயிரீறுமன்று; மெய்யீறுமன்று. அவ்விரண்டின் வேறுபட்டதான சார்பீறு என்பதும், தனிமொழி இறுதியில் அரை மாத்திரை பெற்று நிற்கும் குற்றுகரம் தொடர் மொழி இடைப்படும்போது ஒரு மாத்திரை பெறுகின்ற முற்றியலுகரமாக மாறிவிடும் என்பதும், ஆனால் விதிவிலக்காக வருமொழி முதலில் உயிர் வரும்போது நிலைமொழி இறுதியில் நின்ற ஆறு தொடர்க் குற்றியலுகரமும், வருமொழி முதலில் வன்கணம் வருகின்றபோது நிலைமொழி இறுதியில் நின்ற வன்றொடர்க் குற்றியலுகரம் மட்டும் அரை மாத்திரை பெறும் முற்றுகரமாகவே நிற்கும்” என்பதும் தொல்காப்பியர் கருத்துகளாகும்.

இவற்றுட் பல தொல்காப்பியர் கருத்துகளல்ல; புலவர் முதுகுன்றனா ருடையனவே. குற்றியலுகரமும், குற்றியலிகரமும் குறுகியொலிப்பவை யென்று காட்டுதற்கு அவற்றின்மேற் புள்ளியிடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்துவந்திருக்கின்றது. இதைத் தொல்காப்பியர்,

அவற்றுள் மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் என்று நெறியிட்டபின்,

66

குற்றிய லுகரமும் அற்றென மொழிப”

என்று மாட்டெறிந்ததினாலும், நூற்றொடக்கத்திலேயே,

99

(எழுத்து. 104)

(எழுத்து. 105)