உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குற்றியலுகரம் உயிரீறே (2)

73

அடையடுத்த பெயர்ச் சொற்றொடராகக் கொள்ளாது, அடையடுத்த எழுவாய்த் தொடராகக் கொண்டு ஒன்றுமில்லாத ஒன்றுமில்லாத வெள்ளிடையே மலைபோல் உருக்கொண்டு தோன்றுவதாகப் பொருள் கொள்வதே இவ் விடத்திற்குப் பொருத்தமாம்.

6. "குற்றியலுகரம் என்பதற்குக் குறிதாகிய இயல்பினையுடைய உகரம் என்பது பொருள், எவ்வாறு அகரம் தன்னியல்பில் நிற்பினும், தன்னைக் காட்டிலும் நெடிய ஓசையை உடைய ஆகாரத்தை நோக்கக் குறுகிய ஓசையுடைமையால் குற்றெழுத்து எனப்பட்டதோ, அவ்வாறே அரை மாத்திரை அளவுள்ள, விகாரப்படாத இயல்பான குற்றியலுகரமும் தன்னின் நெடிதாகிய ஒரு மாத்திரையுள்ள முற்றுகரத்தை நோக்கக் குறுகிய ஓசையுடைமையால் குற்றியலுகரம் எனப்பட்டதே தவிர, முற்றுகரம் இடமும் பற்றுக்கோடும் காரணமாகக் குறுகி ஒலித்ததால் அன்று.’

இதில் தன்முரணும் விடாப்பிடியுறழும் (விதண்டாவாதமும்) திரிபுணர்ச்சியும் விளங்கித் தோன்றுகின்றன. ஆகாரத்தை நோக்க அகரம் குறுகிக் குறிலெனப்பட்டாற்போன்று முற்றுகரத்தை நோக்கக் குற்றுகரம் குறுகிக் குற்றியலுகரம் எனப்பட்டதென்று கூறியவரே, இயல்பானதும் திரிபுறாததும் இடமும் பற்றுக்கோடும் அற்றதுமான ஓர் அரையளபுகரம் அந்தரத்தில் தனியாக நிற்பதாக ஒரு மயக்கக் காட்சி காண்கிறார். இடமும் பற்றுக்கோடுமற்று முற்றுகரம்போல் இயல்பான உகரம் எந்த நெடுங் கணக்கில் உள்ளது? குற்றியலிகரம் எங்ஙனம் முற்றியலிகரத்தின் திரிபோ, அங்ஙனமே குற்றியலுகரமும் முற்றியலுகரத்தின் திரிபாகவன்றோ உளது! சொல்லிறுதியாகிய இடமும் வல்லின மெய்யாகிய பற்றுக்கோடு மில்லாத குற்றியலுகரம் எத்தமிழில் எந்நூலில் வழங்குகின்றது? அதை யாருக்கேனும் புலவர் முதுகுன்றனார் காட்டவொண்ணுமோ? முற்றும் வழுவான ஒரு கருத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு. அதற்கேற்ப நூற்பாக்கட் கெல்லாம் உரைதிரித்துக் கூறுவது ஒல்வதொன்றோ? ஒருவர் தெளிந்த நிலையில் தம் தவற்றை உணரலாம். மயக்க நிலையில் எவ்வாறு உணர்தல் கூடும்? அந் நிலையில் அவர் கூறுவதெல்லாம் பொருளுள்ள தாகுமோ? ஏரண முறைப்படி சான்று காட்டித் தம் கொள்கையை நிறுவாது, தம்மொடு மாறுபடுவாரை நோக்கி, “இடமும் பற்றுக்கோடும் காரணமாகவே ஒரு மாத்திரை அளவுள்ள முற்றுகரம் குறுகி விகாரப்பட்டு அரை மாத்திரை யாயிற்று என்று சாதிப்பார் பலருளர்” என்று கூறி என் பயன்?

7. “அவர் கூறும் காரணம் உண்மையாயின், இரண்டு மாத்திரை யளவுள்ள ஐகாரமும் ஔகாரமும், மொழியகத்து வேறு எழுத்துகளின் சார்பால் ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் குறுகி யொலிக்கும் பொழுது ஐகாரக்குறுக்கம் எனவும் ஔகாரக் குறுக்கம் எனவும், அரை மாத்திரை அளவுள்ள மகரம் மொழியகத்து வேறு எழுத்துகளின் சார்பால் கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்போது மகரக்குறுக்கம்