உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழெழுத்துத் தோற்றம்

6

89

நன்னூலிற் பதவியல் என்னும் ஒரேயியலில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியத்திலோ, அஃது அக்காலத்து மாணவர்களுக்குத் தேவை யன்மையின், எழுத்ததிகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் பல்வேறியல் களில் பரக்கக் கூறப்பட்டதொடு நிறுத்தப்பட்டுள்ளது. எழுத்திலக்கணம் பன்னிரண்டனுள், முறையும் உயிர்மெய்க்குரிய கூட்டு வடிவமான உருவப் பகுதியும், முதன்முதல் தமிழிலேயே தோன்றின. அதைப் பின்பற்றியே, முதலில் வடமொழியிலும் பின்பு பிற மொழிகளிலுமாக இந்திய மொழிகள் பலவற்றில் நெடுங்கணக்கெழுந்தது. மேலை மொழிகளிலெல்லாம் இன்றும் முறையின்றி உயிரும் மெய்யுங் கலந்தும், உயிர்மெய்க்குத் தனிவடிவின்றிக் குறுங்கணக்காகவுமே அரிவரியென்னும் எழுத்துப் பட்டி யமைந்திருத் தலைக் காண்க.

இலக்கிய மின்றி இலக்கண மின்றே எள்ளின் றாகில் எண்ணெயு மின்றே எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல

இலக்கி யத்தினின் றெடுபடும் இலக்கணம்

என்பது பேரகத்தியத்தைச் சேர்ந்ததென வழங்கும் ஒரு பழைய நூற்பா. "இலக்கியங் கண்டதற்கு இலக்கண மியம்பலின்" என்றார் நன்னூலார். ஆதலால், தொல்காப்பியத்திற்கு முன்பே பல்துறைப்பட்ட இலக்கியம் இருந்திருத்தல் வேண்டும். இனி,

'முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி”

என்று பனம்பாரனாரும்,

ஔகார இறுவாய்ப்

பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப”

னகார இறுவாய்ப்

பதினெண் ணெழுத்தும் மெய்யென மொழிப்" 'உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே

(8)

(9)

அஃறிணை யென்மனார் அவரல பிறவே”

(484)

"சொல்லெனப் படுப பெயரே வினையென்

றாயிரண் டென்ப அறிந்திசி னோரே”

"இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்று மென்ப" ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை யென்ப

(644)

(947)

அகத்ணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கணம் திறப்படக் கிளப்பின்”

(1002)