உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

தமிழியற் கட்டுரைகள் யென்றும் பொருள், இளமையில் அறிவு முதிராமையின், எழுதிற இளம்பெண் பருவங்களில் முதலதான பேதைப் பருவம் ஐந்து முதல் ஏழாண்டுவரைப் பட்டதாதலையும் நோக்குக. இதனால், இளமையும் இற்செறிப்பும் அறிமடமும் பற்றியதே பெண்டிர்மடம் எனவும், அது எத்துணையும் இழிவு குறித்ததன்றெனவும், ஆடவரும் அறிவில்லாக்கால் பேதைப் பெயர்க்குரியர் எனவும், ஆன்மாவை ஆணவமலம் பிணித் திருப்பதுபோலப் பெண்பாலையே பேதமைக்குணம் இயல்பாய்ப் பற்றிக் கொண்டிருப்ப தன்றெனவும் அறிந்துகொள்க.

ஒதி யுணர்ந்தும் பிறர்க்குறைத்துந் தானடங்காப் பேதையிற் பேதையா ரில்”

என இருபாற் பொதுவாயும்,

Ce

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில்”

(குறள். )

(குறள்.)

என ஆடவரையே சுட்டியும் திருவள்ளுவர் பேதையென்னும் பெயரை வழங்கியமை காண்க. இனி பெண்டிர்க்கு மென்மைத் தன்மை சிறக்க, ஆடவர்க்கு இன்பஞ் சிறப்பதாம். அம் மென்மைத்தன்மைக்கு அணிகலமா யிருப்பது பேதைமையாம். "பேதைமை யென்பது மாதர்க்கணிகலம்”. பெண்டிர்க்கு இயல்பாகவுள்ள மென்மைத் தன்மையால் இரக்கம் சிறந்து. துன்பங் கண்டவிடத்துப் பிறர் பொருட்டு அச்சந் தோன்றும். ஏனை நாணமும் பயிர்ப்பும் சிறந்த குணங்களென்று கூறவேண்டா.

இனி, ஆடவர்க்கு வன்மையும் பெண்டிர்க்கு மென்மையும் சிறப்பியலாதலானும், மென்மையினும் வன்மையே சிறந்ததாதலானும், ஆடவரே சிறந்தவர் எனின், அவ்வன்மை மென்மையாகிய இரண்டும் ஒன்றையொன்று இன்றியமையாமையானும், பயம் பாட்டளவில் இரண்டும் ஒத்திருத்தலானும் மென்மையைத் தழுவிக் தாங்குவதே வன்மையின் பயனாதலானும், மென்மையே இன்பந் தருவதா யிருத்தலானும், இருபாலரும் ஒருபாலரே யெனக் கூறி விடுக்க.

இங்ஙனம் இருபாலரும் ஒருபால ரல்லரெனின்,

"ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்

2

ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியும் காண்க அதுவே, தானே யவளே தமியர் காணக் காமப் புணர்ச்சி யிருவயி னொத்தல்”

JJ

(தொல், பொருள், 2)

(இறையனாகப்பொருள், 2)

என்னும் நூற்பாக்கள் பொருளற்றன வென்க.

மேற்கூறிய அச்சம் முதலிய நாற்குணங்களுடன் மணாளன் அல்லது கணவன் மீதுள்ள அன்புஞ் சேர்ந்தது காதல். காதல்வேறு, கற்புவேறு,