உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கோசர் யார்?

113

மேற்காட்டிய மதுரைக்காஞ்சிப் பகுதியுள் வந்துள்ள ‘நான்மொழிக் கோசர்' என்னும் தொடருக்கும், குறுந்தொகைச் செய்யுளுள் வந்துள்ள ‘நாலூர்க் கோசர்' என்னும் தொடருக்கும், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்மொழியும் வழங்கியதால் நான்மொழிநாடு எனப் பெயர்பெற்ற நாமக்கல் வட்டத்தில் வதிந்த கோசர் என்றும், வால்மீகி இராமாயணத்திற் சொல்லப்பட்ட குசர் என்பவரின் நாற்புதல்வர் அமைத்த கௌசாம்பி முதலிய நாலூரினின்று பரவிய கௌசர் வழியினர் என்றும், பெரும்புலவர் ரா. இராகவையங்கார் முறையே காரணங் காட்டுவர். இனி, அவரே,

"கழுகுமலைச் சாசனங்களில்” நாலூர், நால்கூர் என்ற பெயருடைய ஊர் பல்லிடத்தும் வருதல் காணலாம். கோசர் ஒரு திரளாகச் சபதஞ் செய்துகொள்பவரென்பது இவ்வூரை யடுத்துள்ள "குழுவாணை நல்லூர்" என்ற பெயரான் ஊகிக்கப்படுவது இக்குழுவாணை நல்லூர்க் கோசர்தாம் குறுந்தொகையில் நல்லூர்க்கோசர் என என வ வழங்கப்பட்டனரோ என ஐயுறுகின்றேன். அன்றி மேலே காட்டிய கழுகுமலைப்புறத்து நாலூர் பற்றி நாலூர்க்கோசர் எனப்பட்டனரெனினும் பொருந்தும். ” (பக். 51, 52) எனவும் கூறியுள்ளார்

'வடவேங்கடந் தென்குமரி ஆயிடை

டத்

தமிழ்கூறு நல்லுலகத்து"

என்று பனம் பாரனார் கூறிய தொல்காப்பியர் கால மொழிநிலையே கடைக்கழகக்காலத்தும் தமிழகத்திருந்ததினால், கி. பி. 8ஆம் நூற்றாண்டிற் புகுந்த தெலுங்கும், 10-ஆம் நூற்றாண்டிற்குப்பின் திரிந்த கன்னடமும், 12ஆம் நூற்றாண்டிற்குப்பின் திரிந்த மலையாளமும், 3ஆம் நூற்றாண்டில் நாமக்கல் வட்டத்தில் வழங்கினவென்பது காலமலைவு என்னும் குற்றமாம். ஆகவே நான்மொழிக் கோசர் என்னும் தொடருக்கு, ஒன்று மொழிதல், நண்பர்க்கு உற்றுழியுதவல், எளியாரைக் காத்தல், பழிக்குப் பழிவாங்குதல் ஆகிய நால்வகைப் பூட்கை மொழிகளைக்கொண்ட கோசர் என்று பொருள் கொள்வதே உண்மைக்கும் உத்திக்கும் பொருத்தமாம். மொழி இங்கு றுதிமொழி, “நான்மொழிக் கோசர் தோன்றி யாங்கு” என்னும் மதுரைக் காஞ்சித் தொடருக்கு, “நான்கு வகையாகிய கோசர் வஞ்சின மொழியாலே விளங்கினாற் போன்று என்று நச்சினார்க்கினியர் உரைத்திருப்பதையும் நோக்குக. குறுந்தொகைச் செய்யுளில் வரும் “நாலூர்க்கோசர்” என்னும் தொடரும் நாலுரைக் கோசர் என்பதன் வழூஉ வடிவோ என ஐயுற இடந்தருகின்றது.

"கொங்கு மண்டிலத்துட் பலபாகங்களில், வத்தவன், வத்தராயன், வச்சராயன் என்னும் பெயர்கள் இக்காலத்து வழங்கப்படுவன” என்று. பெரும் பேராசிரியர் பண்டாரகர் (Dr.) உ.வே. சாமிநாதையர் பெருங்கதை