உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கோசர் யார்?

119

யென்றும், தென்னாட்டுத் தூய தமிழ்ப் பழங்குடிமக்களே யென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க.

பண்டைக்காலத்தில், கொல்லேறு தழுவிமணந்த இடையரும் கோளரிக்கும் அஞ்சாக் குறவரும் ஆகிய இரு வகுப்பாரின் வழியினர் ஆரியத்தால் இன்று தம் முன்னோரின் தறுகணாண்மைத் தமிழமறத்தை முற்றும் இழந்திருப்பதுபோன்றே, கூற்றுவனைச் சீறும் கோசரின் வழியினரான கைக்கோளர் செங்குந்தரும் இன்றுள்ளனர் என்க.