உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தலைமைக்குடிமகன்

“இரப்போர் சுற்றமும்........

உழவிடை விளைப்போர்

137

(சிலப். நாடுகாண். 149)

என்றார் இளங்கோ வடிகள்

ஒத்தோர்க்கும் உயர்ந்தோர்க்கும் உயரிய முறையில் விருந்தளிப் பவர், இரப்போர்க்கு உணவும் பிறவும் அளிப்பது வியப்பன்று

புரப்போர் கொற்றத்தான்

அரசன் உட்பட அனைவர்க்கும் உணவு விளைவித்தும், ஆள் வினைக்கு வேண்டும் ஆறிலொரு கடமையிறுத்தும், பகையரசன் படை யெடுத்துவரின் பொருதுவென்றும், ஊக்கமுள்ள தம் வேந்தன் பிறநாடுகளை வென்று புதுவிறல் தாயம் பெற உதவியும், அரசன் வெற்றிபெறக் காரணமா யிருப்பவர் வேளாண்பெருமக்களே.

இதனால்,

ce

பலகுடை நீழலுந்தங் குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்.”

என்று திருவள்ளுவரும்,

"வெளிற்றுப்பனந் துணியின் வீற்று வீற்றுக் கிடப்பக் களிற்றுக்கணம் பொறாத கண்ணகன் பறந்தலை வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே."

என்று வெள்ளைக்குடி நாகனாரும்,

‘புரப்போர் கொற்றமும்...உழ

விடை விளைப்போர்"

என்று இளங்கோவடிகளும், உழவரை உயர்த்துக் கூறினர். உழைப்பாளி

(குறள். )

கடுங்கோடையிலும் புயல்மாரியிலும் இரவும் பகலும் உடலை வருத்தி உழைப்பவர் உழவரே.

"உழுவாருலகத்திற் காணி” என்னுங் குறளில் “அஃதாற்றாது என்னுந் தொடரும், “சுழன்று மேர்ப் பின்ன துலகம்” என்னுங் குறளில் “உழந்தும்” என்னும் சொல்லும், உழவுத் தொழிலின் உழைப்புக் கடுமையைக் குறிக்கும் குறிப்புக்களாம். பயிர்செய்தலைப் ‘பாடுபடுதல்' என்னும் நெல்லையுழவா வழக்கும் இங்குக் கருதத்தக்கது.

தன்னுரிமையாளன்

தன் நிலத்தில் உழுதுபயிர் செய்பவன் தனக்குத் தானே தலைவனாத லின், பிற தொழிலாளர் போல் பிறர்முன் கைகட்டி நிற்க வேண்டியதும் ஒருவர்க்கு அஞ்ச வேண்டியதும் இல்லை.