உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




158

தமிழியற் கட்டுரைகள் குருகு-ஓ. நோ: E. crane, OE. cran, OS., OHG. krano F. grue. குரு-குருள்-குருளுதல்-சுருளுதல். "குருண்ட வார்குழல்” (திருவிசை. திருவாலி. 1:3)

குருள்-1. நெற்றி மயிர்ச்சுருள். (W.). 2. பெண்டிர் தலை மயிர். (பிங்.). குருள்-ஒ.நோ: E.curl, MDu. krul, G. krol, LG., Du., E Fris, kurl. குரு-குறு-கிறு. கிறுகிறுத்தல்-1. தலை சுற்றுதல். 2. மயக்கமடைதல். கிறுகிறுவாணம்-சிறுவர் சுழற்றி விளையாடும் பொரிவாணம். குறு-குற-குறங்கு-கறங்கு.

6

கறங்குதல்-1. சுழலுதல். “பம்பரத்து.......கறங்கிய படிய” (கந்தபு. திருநகரப். 28). 2. சூழ்தல். 'கறங்கிருள் மாலைக்கும் (திருவள்ளுவமாலை, 34).

கறங்கல்-1. சுழற்சி. (பிங்.). 2. வளைதடி. (அக. நி.).

கறங்கு-1. சுழற்சி. (திவா.). 2. காற்றாடி. “கான்முக மேற்ற....கறங்கும்" (கல்லா. கணபதி).

கறங்கு-ஓ நோ: Gk guros, ring. L. gyre, E. gyrate, go in circle or spiral, revolve, whirl

குறு-குறள்-குறண்டு-குறண்டுதல்-1.

கொள்ளுதல்.

குல்-குள்-குளம்-1. வளைந்த

வளைதல். 2.

சுருண்டு

நெற்றி. திருக்குள முளைத்த

கட்டாமரை” (கல்லா. 31:9). 2. வெல்ல வுருண்டை.

குளம் (வெல்லம்)-வ. gula.

குளம்-குளம்பு-உருண்டு திரண்ட விலங்குப் பாதம்.

குள் குளி-குளியம்-1. உருண்டை. (அக. நி.). 2. உருண்டையான மருந்து மாத்திரை. (பிங்.)

குளி-குளிகை-1. உருண்டையான மருந்து மாத்திரை. 2. பொன்னாக்க மாத்திரை, "குளிகையிட்டுப் பொன்னாக்குவன்” (திருமந். 2709). "குளிகை-வ. குளிகா (gulika).

குழலுதல்-சுருளுதல், "கடை குழன்ற கருங்குழல்கள்” (சீவக. 164). குள்-குளல்-குழல்.

குழல்-1. மயிர்க் குழற்சி. “குழலுடைச் சிகழிகை" (சீவக. 1092). 2. பெண்டிர் தலைமயிர் சுருட்டி முடிக்கப்படுகை. (திவா.).