உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழா வாழ்த்துரை விளக்கம்

£

6

161

கொள்-கொள்கு-கொட்கு கொட்குதல்-1. சுழலுதல். “வளிவலங் கொட்கு மாதிரம்” (மணி. 12;91). 2. சூழ வருதல். “காலுணவாகச் சுடரொடு கொட்கும்" (புறம். 43:3). 3. சுற்றித் திரிதல். “கொடும்புலி கொட்கும் வழி” (சிறுபஞ். 80). ஒ. நோ: வெள்-வெள்கு-வெட்கு. கொள்ளுதல்-1. வளைதல், 2. சுழலுதல் 3. திரிதல்.

கொள்-கொட்பு-1. சுழற்சி. "கொட்புறு கலினப் பாய்மா' (கம்பரா. மிதிலை. 13). 2. சுற்றித்திரிகை. (திவா).

கொள்-கொட்கு-கொக்கு-வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை. கொட்கு-கொட்கி-கொக்கி-வளைந்த கொளுவி. ஒ. நோ கொக்கி-E. hook, OE. hoc, MLG hok, Du. hock. கொள்-கொட்டை. ஒ.நோ: வள்-வட்டை. கொட்டை-1. உருண்டு திரண்ட விதை. 2. அவ்விதை போன்ற உறுப்பு. 3. உருண்ட தலையணை, "பஞ்சின் நெட்டணையருகாக் கொட்டைகள் பரப்பி” (பதினொ. திருவிடைம. மும். 19). 4. ஆடைத்தும்பின் மணி முடிச்சு. “கொட்டைக் கரைய பட்டுடை நல்கி” (பொருந. 155). 5. பாதக் குறட்டின் குமிழ். “பவழக் கொட்டைப் பொற்செருப் பேற்றி” (பெருங். மகத. 22:202). 6. பஞ்சுச் சுருள். 'கொட்டைத் தலைப்பால் கொடுத்து " (திவ். பெரியாழ். 3:5:1). 7. உருண்ட பருவடிவம். கொட்டையெழுத்து; (உ.வ.).

கொள்-கோள்-1. சுற்றிவரும் அல்லது உருண்டையான விண்சுடர் அல்லது வேறுலகம். “எல்லாக் கோளும் நல்வழி நோக்க” (பெருங் இலாவாண. 11:70). 2. திங்களைச் சூழும் கோட்டை. “மதியங் கோள்வாய் விசும்பிடை” (சீவக. 1098).

கோள்- கோளம்-1. உருண்டை. 2. உயிர்மெய்களில் (பிராணிகளில்) நீர் சுரக்கும் தசைப்பகுதி.

கோளம்-வ. கோல (gola).

கோளம்-கோளகம்-1. உருண்ட மிளகு. 2. மண்டல விரியன். (பிங்). கோளகம்-வ. கோலக (மிளகு), கோலக(g) (மண்டல விரியன்)

கோளகம்-கோளகை-1. வட்ட வடிவம், “அண்ட கோளகைப் புறத்ததாய்” (கம்பரா. அகலிகைப் 60). 2. கிம்புரிப் பூண் வளையம். 3. மண்டலிப் பாம்பு. (சூடா.).

கோளகை-வ. கோலக (g).

கோள்-கோளா-1. நறுமணப் பண்டங் கலந்ததும் இறைச்யுள்ளிட் டதுமான உண்டையுணவு 2. கஞ்சாவுருண்டை.

கோள்-கோண்-கோணுதல்-1. சாய்தல். 2. வளைதல். 3. நெறிதவறுதல். 4. மாறுபடுதல். 5. வெறுத்தல். 'கோணிக் கோணிக் கோடி கொடுப்ப திலும் கோணாமற் காணி கொடுப்பது மேல்.” (பழ).