உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

எ-கா : மலையாளம்

வீடு

தெலுங்கு இல்லு(இல்)

தமிழியற் கட்டுரைகள்

கன்னடம் மனெ(மனை)

திரவிடமொழிகள் பேச்சு வழக்கில் திரிந்திருப்பினும், இலக்கிய வழக்கிலேனும் தமிழைப் பின்பற்றியிருந்திருப்பின் இன்றுள்ள வேறுபாடும் மாறுபாடும் நேர்ந்திரா. இற்றைத் தமிழ் நாட்டிற் பேச்சு வழக்கு இடத்திற் கேற்ப வேவ்வேறு வகையில் திரிந்திருப்பினும், இலக்கிய வழக்கிற் செந் தமிழைக் கடைப்பிடிப்பதால், நாடுமுழுதும் தமிழ்நாடென்றே வழங்குதல்

காண்க.

2. நிலங்குன்றாமை

செந்தமிழ் கொடுந்தமிழாகத் திரிந்து பின்னர்ப் பல்வேறு மொழி களாகப் பிரிந்து போனதனால், ஒருகாலத்திற் பனிமலைவரை பரவியிருந்த தமிழ்நிலம் படிப்படியாகச் சுருங்கி, இன்று சேரநாடுஞ் சேராது வடசோழ மாகிய தொண்டைநாடும் முண்டமாகியுள்ளது. கடைக்கழகக் காலத்தில் வேங்கடக் கோட்டம் வரை ஒருமொழி நாடாக இருந்த நிலம், இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, குடகம், துடவம், கோத்தம், படகம், மலையாளம், கொங்கணி என்னும் ஒருபான்மொழி நாடாகப் பிரிந்துள்ளது.

3. இனவொற்றுமை

மொழி யொற்றுமையாலேயே இனவொற்றுமை நிலைத்து நிற்கும். மொழி வேறுபாட்டால் இன வேறுபாடும் அதனால் ஒற்றுமையின்மையும், இன்று இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் விளங்கித் தோன்றுகின்றது. திரவிடமொழியார் சமற்கிருதத்தைப் போற்றுவதும் தமிழைப் புறக்கணிப்ப தும் மொழி வேறுபாட்டின் விளைவே.

4. வேர்ப்பொருள் மறையாமை

“எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே,” என்று சொல்லக்கூடிய மொழி, இவ்வுலகில் தமிழ் ஒன்றே. அது செந்தமிழ் வரம்பில் நிற்பதால், அது தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டுகளாயினும், ஆயிரக்கணக்கான அடிச்சொற்களும் இணைப்புச் சொற்களும் இறந்துபட்டும், இன்னும் அதன் பெரும்பாற் சொற்கள் வேர்ப்பொருள் காட்டி நிற்கின்றன. பிறமொழிக ளெல்லாம் திரிமொழிகளாதலால், அவற்றின் சொற்கட்கு வேர்ப்பொருளும் மூலமும் தெரியாது. வடமொழியாளர் வடசொற்களை இடுகுறி, கரணியக்குறி என இருவகையாய்ப் பிரித்ததோடு, மேலையரும் எல்லா மொழிகளும் இடுகுறிச் சொற்றொகுதிகளே என்று முடிவுசெய்து, அவ்வடிப்படையில் வண்ணனை மொழிநூலையும் தோற்றி வளர்த்து வருகின்றனர்.

சொல் இயனிலையில் மூலப்பொருள் காட்டுவதையும் திரிநிலையிற் காட்டாமையையும், கீழ்வரும் எடுத்துக்காட்டிற் காண்க.