உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




184

தமிழியற் கட்டுரைகள்

பிராமணர்க்குப் பக்கத் துணையாகவே நிற்பர். தமிழனுக்குப் பொழுது விடியாது. காலஞ் செல்லச் செல்ல அடிமைத்தனம் பெயர்க்க முடியாதவாறு ஆழ வேருன்றி விடும். ஆதலால், விழித்திருந்து இன்றே இன்னே விடுதலை பெறல் வேண்டும்.

"தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்.

தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும்.

நமை வளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்

தமிழல்லால் நம் முன்னேற்றம்

அமையாது சிறிதும் இதில் ஐயமில்லை

ஐயமில்லை அறிந்து கொண்டோம்.”

-பாரதிதாசன்.

மாண்புமிகு முதலமைச்சர் கருணாநிதியென்னும் அருட்செல்வனார் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தை ஏற்றுக்கொண்டமை யால், பாரதிதாசன் கனவு நிறைவேறிவிட்டது.

୧୧

புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை

வெளியிட்டு வேறாதல் வேண்டும்-வழிபெருங்

கண்ணோட்டஞ் செய்யேல் கருவியிட் டாற்றுவார் புண்வைத்து மூடார் பொதிந்து."

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிர்ஒன் றேனையது தன்னே ரிலாத தமிழ்."

வையக மெல்லாம் வடமொழியைப் போற்றினும்

மெய்யகந் தென்மொழி

மேற்று.

-

குமரகுருபரர்

- பழந்தனிப்பா

தமிழ்நாடு இன்னும் விடுதலை பெறவில்லை. ஆங்கிலராட்சி நீங்கினவுடன் விடுதலை வந்து விட்டதென்பது, வரலாறறியாதார் குருட்டு நம்பிக்கையே. உண்மையான கொடிய அயலாட்சி பிராமணியம். இந்தியக் கட்டாயம் நீங்கி, ஆங்கிலமும் நிலையான இந்திய ஆட்சி மொழியாகி தமிழ்நாட்டுத் திருக்கோவில்களிலெல்லாம் தமிழே வழிபாட்டு மொழியாகி நாட்டு வாழ்த்துத் தமிழிலேயே பாடப்படும் போதுதான், தமிழ்நாடு விடுதலையடைந்ததாகும்.

இன்று தமிழ்நாட்டைக் கெடுப்பவை பல்குழுவும் உட்பகையும் கொல்குறும்புமே. இம் மூன்றும் திருவள்ளுவர் காலத்திலேயே தீங்கு செய்யத் தொடங்கி விட்டன. அதனாலேயே, அவர்