186
16. வாழ்த்து
தமிழியற் கட்டுரைகள்
1. ஒள்ளியநல் லறம்பொருளும் இன்பவீடும் இனியென்றும்
உலகருறத் தமிழருக்கென் றுருவான
தெள்ளுதமிழ்த் திருக்குறளைத் தீட்டியுயர் திருவாரூர்த் தேர்வடிவிற் சூழ்வுதிகழ்ந் திலகுதிரு
வள்ளுவர்நற் கோட்டமதை வகுத்தமைத்தான் கரிகாலன் வழியனெனத் தகுகருணா நிதியென்னும்
வள்ளல் அருட் செல்வன்தென் னிலத்தலைமை வாழிவாழி வையகமே போற்றும்வகை நீடூழி.
2. தமிழ்நாட்டில் முதன்முதலாய்த் தலைசிறந்த தமிழ்ப்புலமை தாங்குமயற் சொற்பெயரைத் தள்ளியபின் நிமைகாக்குங் கண்ணெனவே நிவந்ததமிழ்ப் பெயரேற்ற நெடுஞ்செழியன் எனுங்கல்வி யமைச்சன் முன் தமிழ்காத்த பாண்டியன்போல் தன்கடமை யென்றுணர்ந்து தமிழாட்சி மொழியாக மாணவரின்
சுமைநீக்கி யிருமொழிக் கல்வியை யமைத்தான் சோர்வில்லாச் சொல்வல்லான் நீணெடுங்கால் வாழியரோ.
3. முன்பருமைப் பெற்றோரே யிட்டதெனா தொருமருங்கு மொழிபெயர்த்தோ இராமையா எனும் பெயரை அன்பழகன் என்றழகா யமைத்தொருபேர் வழிகாட்டி அவலவெந்நோய் தீர்க்குமுடல் நலத்துறையில் பண்புமிகு மாணவரும் பண்டுவரும் படிப்படியாய்ப் பைந்தமிழில் நலத்துறையை மாற்றுதற்கு
நன்பணிசெய் அமைச்சனுடன் எம்பெருமான் துணையிருக்க நானிலத்து நூறாண்டு வாழியரோ.
4. பொதுப்பணித் துறையமைச்சன் சண்முகன்நற் சீராளன் பொறுப்புடன் கோட்டத்தைப் புனைந்தமைக்க விதப்புறுங் கண்காணச் சூழ்ச்சியகன் வினைதேர்ந்த வேங்கடா சலபதியுங் கூடுபெரு
மிதத்துடன் பணிசெய்து கம்மியரும் ஏவலரும்
மிடுக்கொடு பல்லாண்டு வாழியரோ!
மதர்ப்புறு தமிழருடன் பிறநாட்டார் ஆராது
மதிப்பொடு நாள்தோறுங் கண்டிடவே.