10
பச்சிலை Pachouli
மிளகுத் தண்ணீர் - Mulliga tawny
வெற்றிலை - Betel
தமிழியற் கட்டுரைகள்
ஆனைகொன்றான் என்பது இலங்கையில் ஆனையைக் கொல்லத் தக்க ஒரு பெரும் பாம்பிற்குப் பெயரென்றும், பின்பு அது தென்அமெரிக்கா விலுள்ள ஒரு பெரும் பாம்பிற்கும் இடப்பட்டதென்றும், கீற்று (Skeat) என்னும் ஆங்கிலச் சொற் பிறப்பியலகராதியாசிரியர் வரைந்துள்ளார்.
தேக்கு, வெற்றிலை என்பவை மலையாளச் சொல்லாகக் குறிக்கப் பட்டுள. மலையாளம் என்பது பழஞ் சேரநாட்டுத் தமிழ் என்பதை அறிக. இனி, Amuck (Amoq) என்பது மலையாச் சொல்லென்றும், Taboo (Tapu) என்பது பாலினீசியச் சொல்லென்றும், உயர்வில்லாமொழிச் சொற்களைக்கூட உள்ளவாறே வெளியிட்டிருக்கின்றனர். ஆயின், வடமொழியாளரோ, வடமொழியில் ஐந்திலிரு பகுதி தமிழாயிருந்தும், ஒரு சொல்லைக்கூடத் தமிழென்று ஒப்புக்கொள்ளாமல் வடமொழி தேவ மொழியென்றும். அது பிற மொழியினின்று கடன் கொள்ளாதென்றும், இந்தியப் பழங்குடி மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றனர், அதற்கேற்ப. அவர் வடமொழியிலுள்ள தென்சொற்களையெல்லாம் தவறாகப் பிரித்து, பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் பொருள் கூறியிருக்கின்றனர்.
எ-டு : உலகு:
உலம் = உருட்சி, திரட்சி, உருண்டகல்
உலம்வா - உலமா, உலமருதல் = சுழலுதல் உலக்கை = உருண்ட பெருந்தடி
உலண்டு = உருண்டுநீண்ட புழு
உலம் = உலவு, உலவுதல்=சுற்றுதல், திரிதல்
உலவை = சுற்றி வீசுங் காற்று.
உலா =சுற்றி வருதல், அரசன் நகரை வலமாகச் சுற்றி வருதல் உலா -உலாவு, உலாவுதல் = சுற்றித்திரிதல்
உலா
உலாத்து, உலாத்துதல் = சுற்றித் திரிதல்
உலா - உலாஞ்சு, உலாஞ்சுதல் = தலை சுற்றுதல் உலம்-உலவு-உலகு=உருண்டையானது, கதிரவனைச் சுற்றி
உலகு-உலகம். ஒ.நோ: கடுகு-கடுகம்
வருவது
அண்டம், கோளம், Globe, Sphere முதலிய பிற அல்லது பிறமொழிச் சொற்களும் உலகத்தைக் குறிப்பது உருட்சிபற்றியே.
உலகம் என்பது வடமொழியில் லோக்க (loka) என்று திரியும், அதற்கு லோக் என்பதை வேராகக்கொண்டு பார்க்கப்பட்ட இடம் என்று பொருட்காரணங் காட்டுவர். லோக் என்பதற்கு Look என்னும் ஆங்கிலச்