உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும்

நாவாய்

navis

nau

பொறு

ber

port, fer

pher

மன்

man

முழுகு

merg

முன்னு மெது

mun

bhar

manu

majj

man

smooth

வல்

val

mrudu

bal

15

தியூத்தானியம் என்பது, ஆங்கிலம், செருமானியம், தச்சம் (Dutch), தேனியம் (Danish), ஐசுலாந்தியம் (Icelandic), முதலிய மேலையைரோப்பிய மொழிகளைக்கொண்ட ஒரு கிளையாரியக் குடும்பமாகும்.

உண்மை விடுதலை:

ஆங்கிலர் ஆட்சி நீங்கினதினால் மட்டும் தமிழன் விடுதலை யடைந்து விடவில்லை. கீழையாரியமாகிய வடமொழிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ், விடுதலையடைந்து, முன்போல் மீண்டும் கோயில் வழிபாட்டு மொழியானாலொழிய, தமிழனுக்கு விடுதலையில்லை. உண்மையில் தேவமொழியென்று உலகில் ஒருமொழியுமில்லை. அங்ஙனம் ஒன்று இருக்குமாயின், அது, கி. மு. ஐம்பதினாயிரம் ஆண்டுகட்குமுன் குமரிக்கண்டத்தில் தானே தோன்றியதாயும், வடமொழிக்கு மூலமாயுமுள்ள தமிழாய்த்தானிருக்க முடியும்.

தமிழ் நாட்டில் விருதுநகர் சிலவகையில் சிறந்த நகராகும். விருது என்பது, பட்டம், கொடி முதலிய வெற்றிச் சின்னங்களுள் ஒன்றைக் குறிக்கும் பெயர். நாடார் கோட்டைகளுள் நாயகமானது விருதுநகர். நாடார் என்பது, நாடான் என்னும் சொல்லின் உயர்வுப் பன்மையாய், நாட்டாண்மைக் காரனை அல்லது நாடாளியைக் குறிக்கும் பெயர். நாடன்– நாடான் - நாடார்.

பேராயக் (Congress) கட்சியைச் சேர்ந்த திருவாளர் காமராசு நாடாரும், நேர்மைக் (Justice) கட்சியைச் சேர்ந்த திருவாளர் (V. V) இராமசாமி நாடாரும், விருதுநகர் வாணர். இவருள், முன்னவர் ஆங்கில அடிமைத்தனத்தை அகற்றியவர்; பின்னவர் தமிழனின் உண்மை நிலைமையறிந்து ஆரிய அடிமைத்தனத்தையும் அகற்ற விரும்புகின்றவர். ஆதலால், அவர் தமிழர் அனைவராலும் பாராட்டப் பெறத்தக்கவராவர். இந்நிலவுலகில் அவர் நீடுவாழியாய் நின்று நிலவ, இறைவன் திருவருள் பொழிக.