உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் தனித்தியங்குமா?

17

சொற்கள் தமிழில் வேண்டாது புகுத்தப்பட்டதன் விளைவாக அவற்றிற்கு நேரான விழுமிய தென் சொற்கள் சிறிதும் பெரிதும் முற்றும் வழக்கு வீழ்த்தப் பட்டுள்ளன.

எ-கா :

வடசொல்

அன்னம்

ஆன்மா

ஆனந்தம், குதூகலம், சந்தோசம்

சகுனம்

சத்தியம், நிசம், வாஸ்தவம்

சீரணம்

சுத்தம்

தந்திரம்

திருப்தி

பிதிரார்ச்சிதம்

மேகம்

புள்

தென்சொல் எகின், ஓதிமம்

ஆதன், உறவி, புலம்பன் உவகை, களிப்பு, மகிழ்ச்சி

உண்மை, வாய்மை, மெய்(ம்மை) செரிமானம்

துப்புரவு

வலக்காரம்

பொந்திகை

முது சொம்

முகில், கார், கொண்டல்

ஊதியம்

லாபம்

நட்டம்

மைத்துனன்

வருசம்

ஸ்திரீ, புருஷர்

இழப்பு

அளியன்

ஆண்டு

ஆடவர், பெண்டிர்

இங்குக் குறிக்கப்பட்ட வட சொற்கள் விளங்குதற் பொருட்டுப் பெரும்பாலும் தற்பவ வடிவிற் காட்டப்பட்டுள்ளன.

நகைச் சுவையை ஹாஸ்ய ரசம் என்பதும், அவையைச் சதஸ் என்பதும், பணிவிடையைச் சிசுருஷை என்பதும், திருமணத்தைப் பரிணயம் என்பதும், குடமூக்கு (குடந்தை), குரங்காடுதுறை, சிற்றம்பலம் (தில்லை), பழமலை (முதுகுன்றம்), மயிலாடுதுறை, மறைக்காடு முதலிய செந்தமிழ் நாட்டூர்த்தனித் தமிழ்ப் பெயர்களை, முறையே, கும்பகோணம், கபிஸ்தலம், சிதம்பரம், விருத்தாசலம், மாயூரம், வேதாரணியம் என வட சொற்களாய் ஏற்கெனவே, மாற்றியிருப்பதும், இத்தகைய இழி செயலை இன்றும் கையாள்வதும், தென்னாட்டு வடமொழியாளரின் வரையிறந்த வடமொழி வெறியையன்றி வேறெதைக் காட்டும்?

இன்று தமிழில் வழங்கும் வட சொற்கள் தமிழிற்கு வேண்டியவுமல்ல; தமிழர் விரும்பியவுமல்ல. உடம்பிற்குட் புகுந்து அதனுக்கு ஊறுசெய்யும் நச்சுப் புழுக்களையும் இன்னாப் பொருள்களையும் அதன் நலத்தின் பொருட்டு நீக்குவது போன்றே, வேண்டா வடசொற்களையும் தமிழினின்று விலக்குதல் வேண்டும். இதனைத் தடுப்பவர் புறப் பகைவரும் உட் பகைவருமாயேயிருத்தல் வேண்டும்.

வடசொற்கட்கு இங்குக் கூறியது பிற சொற்கட்கும் ஒக்கும்.