உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

தமிழியற் கட்டுரைகள்

முதலிய பல்வேறு கலையும் அறிவியலும் பற்றிய ஆயிரக் கணக்கான அரிய நூல்களும்; தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள, அறுவகைப்பாவும் அவற்றின் வேறுபாடுகளும்,

பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அகங்கதம் முதுசொல்”

(1236)

என்னும் எழுநிலை யாப்பும், வாழ்த்துவகையும் பண்ணத்தியும் இருபது வண்ணமும், எண்வகை வனப்பும் நூற்றுக்கணக்கான அகப்பொருள் புறப்பொருட்டுறைகளும் ஆகியவற்றிற்குரிய பண்டை யிலக்கியமும், ஆரியச்சார்பற்ற அருந்தமிழ் நூல்களே.

திரவிட மொழிகளிலுள்ள இலக்கியமெல்லாம் பெரும்பாலும் வடமொழி யிதிகாச புராணங்களின் பெயர்ப்பும் திரிப்புமே.

3. நூற்சிறப்பு

தொல்காப்பியம், திருக்குறள், கலித்தொகை, சிலப்பதிகாரம் திருக்கோவை, கம்பவிராமாயணம், திருப்புகழ், காளமேக, மாம்பழக் கவிராயர் பாடல்கள் ஆகியவற்றை யொத்த பனுவலும் பாடலும் எத் திரவிட மொழியிலும் காணக் கிடைக்குமோ? ஆரியப் பேரிலக்கிய மொழிகளிலும் அவற்றைக் காண்பதரி தாயிருக்கும்போது, திரவிட மொழிகளில் அவை இல்லவே யில்லை யென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

4. இலக்கண அமைதி

முதலீறை நிலையென்னும் எழுத்து வரையறையும், சில சொன்மரபும், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் யாப்பு வகையும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடும், செந்தமிழ் என்னும் வரம்பும், திரவிட மொழிகட்கில்லை.

5. இலக்கியத் தொன்மை

தலைக் கழகக் காலத்திலேயே முத்தமிழிலக்கண விலக்கியம் முற்றியிருந்தமையால், கி. மு. பத்தாயிரம் ஆண்டுகட்குமுன்பே தமிழிலக்கியம் தோன்றியிருந்தமை புலனாம். திரவிட மொழிகளிலுள்ள இலக்கியமெல்லாம் கி. பி. 8ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவையே.

6. மொழித்தொன்மை

தமிழ்த் தோற்றம் கி. மு. ஏறத்தாழ ஐம்பதினாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது.

கொடுந்தமிழ்களுள், வடுகென்னும் தெலுங்கு திரிந்தது. கி. மு. 10ஆம் நூற்றாண்டு; கருநடம் என்னும் கன்னடம் திரிந்தது. கி. பி. 6ஆம் நூற்றாண்டு; சேரலம் என்னும் கேரளம் அல்லது மலையாளம் திரிந்தது. கி. பி. 13ஆம் நூற்றாண்டு ஏனைத் திரவிடங்கள் திரிந்தது இவற்றிற்கிடையும் பின்னும்.