உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

தமிழியற் கட்டுரைகள்

அத்துணைச் சிறந்ததன்று. ஆயினும், அதுவும் தொல்காப்பியத்திற் காணப்பெறவில்லை.

கிறு கின்று ஆநின்று என நிகழ்கால இடைநிலை மூன்றென்பர் நன்னூலார். இவற்றுள் கிறு என்பது கின்று என்பதன் தொகுத்தலே. இவற்றை இரண்டாகக் கொள்ளினும், மூன்றாகக் கொள்ளினும், இழுக்கன்றாம், ஆயின் இவற்றுள் ஒன்றைக் கூடத் தொல்காப்பியர் தனியாகவே வினைச்சொல்லில் வைத்தோ குறியாதது மிகவும் வியத்தற்குரியதே.

இனிநிகழ்கால வினைபற்றிய தொல்காப்பிய நூற்பாக்களும், அவற்றிற்குச் சேனாவரயர் தந்த எடுத்துக்காட்டும், வருமாறு "நிகழுஉ நின்ற பலர்வரை கிளவியின்

உயர்திணையொருமை தோன்றலு முரித்தே அன்ன மரபின் வினைவயி னான

எ-கா : சாத்தன்யாழெழுஉம், சாத்தி சாந்தரைக்கும்,

(பெயரியல் 3.19)

"பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை

அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச்

செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா”

(வினையியல் 30)

(இதற்கு எடுத்துக்காட்டு நூற்பாவிலேயே உள்ளது)

'நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட

அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய

செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே."

(வினையியல் 37)

எ-கா : வாழுமில், கற்குநூல், துயிலுங்காலம், வனையுங்கோல், ஒதும் பார்ப்பான், உண்ணுமூன்..... (புக்கவில், உண்ட சோறு, வந்தநாள், வென்றவேல், ஆடியகூத்தன், போயின போக்கு)

அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி

முதற்கண் வரைந்த மூவிற்று முரித்தே"

(வினையியல் 38)

(இதற்கும் எடுத்துக்காட்டு நூற்பாவிலேயே உள்ளது)

முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை

எம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து

மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்"

எ-கா :

(வினையியல் 43)

"மலைநிற்கு, ஞாயிறியங்கும், திங்களியங்கும் எனவும்” “தவங்கதிர்க் கனலியொடு மதிவலந் திரிதிருந் தண்கடல் வையத்து” எனவும் வரும்